பக்கம்:அன்னை தெரேசா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. எனது எதிர்காலம் என்பதாக நான் கொண்டிருந்த, என்னுடைய ஆசைத் துடிப்பை வளர்ப்பதே போன்று, எனக்கு முதல் கட்டளையைத் தாங்கள் பிறப்பித் தீர்கள்: ஆளுல், அதற்கான நல்ல வழியை உங்கள் அபலேக்கு, எப்போதுதான் காண்பிக்கப் போகிறீர்களோ? - தெரிய வில்லேயே, தெய்வத் தந்தையே!... தாங்கள் அன்று எனக்கு இட்ட அந்த ஆணையை நிறைவேற்றத் தொடங்குவதற்கு உரிய தகுதியையும் வாய்ப்பையும் விரைவிலேயே எனக்கு, அனுக்கிரகம் செய்ய வேண்டும், கர்த்தர் பிரானே!” தளராத நம்பிக்கையோடும், தளர்ச்சியடையாத தன்னம் பிக்கை யோடும், சிலுவைக் குறியிட்டு, தியான மாலே உருட்டி,அல்லும் பகலும் இடையருமல் சிலுவை நாதரைப் பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார் தெரேசா. மேலும் சில நாட்கள் நகரலாயின. உலகத் தின் மூலே முடுக்குகளிலெல்லாம் அன்பு சிதறி, கனவு கலேந்து, வாழ்வு இழந்து, ஆர்வம் குலைந்து ஏங்கியும் உருகியும் தவித்துக் கொண்டிருந்த எண்ணிலடங்காத ஏழைகளேப் பற்றியே அல்லும் பகலும் நினைந்து நெகிழ்ந்து துடிதுடித்துக் கொண்டேயிருந்த அக்னெஸ், பாவப்பட்ட ஜன்மங்களின் துன்ப வாழ்க்கையில் இன்ப விடியலை ஏற்படுத்த அங்கங்கே பாடுபட்டுக் கொண்டிருக்கு ம். மக்கட்பணியாளர்களுக்கு மத்தியிலே தானும் ஒருத்தி யாகப் பாடுபடுவதற்குப் பொன்னை நல்வாய்ப்பினே ஏற்படுத்தக் கூடிய அந்த ஓர் இனிய விடிபொழுதுக்காகவே காத்துத் தவம் இருந்தாள். தவம் பலித்தது. பிரார்த்தனை ஈடேறியது. ஆசை வென்றது. கனவு நிறைவேறியது. அக்னெஸ் கன்னிமைத் துள்ளலுடன் ஆனந்தக் கூத்து ஆடிஞள்: அன்பிற்கினிய கர்த்தர் மிக மிக மேலானவர்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/50&oldid=736362" இலிருந்து மீள்விக்கப்பட்டது