பக்கம்:அன்னை தெரேசா.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 அதோ, அந்த இனிய, நல்லபொழுது விடிகிறது: விடிந்து கொண்டிருக்கிறது! விடிந்து கொண்டிருந்த நல்லபொழுதிற்கு உகந்த நாள்: 1946, செப்டம்பர், 10. தூய சகோதரியாம் தெரேசா அப்போது டார்ஜிலிங் மலைநகருக்கு ரயிலில் பயணம் செய்தார்! கீதாஞ்சலியின் இதயநாதம், ஆண்டவன் வழிபாட்டில் ஒன்றியிருந்த தெரேசாவின் இளகிய இளம் மனத்தில் தேன் வண்டென ரீங்காரம் செய்தது. "ஆண்டவனே! எனது வாழ்வின் இம்சையும் அபசுரங்களும் உருகி ஓடி, ஓர் இன்னிசையாக ஒலிக் கையில், ஆனந்தமான பறவை ஒன்று சுதந்திரமாகக் கடலேத் தாண்டிப் பறந்து செல்ல, அச் சமயத்தில், என் அருட்சிந்தனையும் சிறகடித்துப் பறக்கத் தொடங்கு கிறது!-நான் பாடும்பொழுது, உனது உள்ளம் மகிழ்வதை நான் உணருவேன்; ஆகவே, உன்னுடைய அறக் கருணையைப் பெற்றுப் புண்ணியமும், புனிதமும் பெற். றிலங்க, நான் உன் சந்நிதியிலே எப்போதுமே ஒரு பாடக ஞகவே இருக்க ஆசைப்படுகிறேன்!” செபமாலை உருள்கிறது. சிலுவை குலுங்குகிறது. ஆன்மா துடிக்கிறது. அன்பு சிரிக்கிறது! தோத்திரம் தொடர்கிறது. தியானம் நீள்கிறது. அன்பு மறுபடி சிரிக்கிறது!... மறுகணம்: ஏழைமை ஒலமிடுகிறது! அன்பு அலறுகிறது!