பக்கம்:அன்னை தெரேசா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இயற்கைத் தாயின் அன்பான தாலாட்டில் அகமும், புறமும் திளைத்து விரைந்து கொண்டிருந்தது டார்ஜிலிங் ரயில் வண்டி. மகளே!... வழிபாட்டுத் தியானத்தில் மனம் லயித்து ஈடுபட்டி ருந்த பரிசுத்தக் கன்னிச் சோதரி தெரேசாவின் ஈரமான கண்கள் திடீரென்று திறந்தன: உள்ளத்தின் உள்ளத்தில் கொடி மின்னலாக மின்னிப் பளிச்சிட்ட அந்த ஒளியின் சிதறல்களில் உள்ளமும் உடலும் இவிர்க்கக் கண்கள் இன்னமும் கூசின!-இதயத்தின் இதயத்தில் ஒலித்து எதிரொலித்த அந்தக் குரலின் அன்பான நாத அலைகளில் மெய்சிவிர்க்கிறது! அந்த ஒளி, ஆண்டவனின் பேரொளி அல்லவா? அந்த ஒலி, பரமபிதாவின் பெருங் குரல் ஆயிற்றே! இளைய துறவி தெரேசா மெய்ம் மறந்தார். மெய்ம் மறந்த சுடுநீர் மணிகளில் தேவாலயத்தின் மணி ஒலியும் மெழுகுவர்த்தி ஒலியும் ஒலி சேர்த்தன; ஒளி சேர்த்தன. "அன்பிற் கினிய எனது. இனிய ஆண்டவரே! அருமை மிகு ஏக பிரானே!’’ தெரேசா . உயிரும், உள்ளமும் ஒடுங்க, விம்மிக் கொண்டேயிருந்தார். மீண்டும் சிலிர்த்தது மேனி; மீளவும் கண்கள்!- ஆ!... அதோ, என் ஏசு!” அந்த ஒளி, கர்த்தர் பெருமானின் பேரொளியே தான்!. ஆஹா!. ... " - இதோ, விவிலியத் திருமறைநாயகன் அன்புக்குரல் மறுபடி எதிரொலிக்கிறதே? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/52&oldid=736364" இலிருந்து மீள்விக்கப்பட்டது