பக்கம்:அன்னை தெரேசா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§1 டிசம்பர், 21-ம் நாளன்று, அன்னே தெரேசா சேரிப் பள்ளியை முறையாக ஆரம்பிப்பதற்கான அனுமதியை மேதகு போப் பயஸ் (Pope Pius XII) வழங்கி விட்டார்! சகோதரி தெரேசா இப்போது அன்ன பாரதத்தின் அன்பிற்குரிய அருமைக் குடிமகள் ஆளுர்; இந்தியத் தெரேசா ஆகிருர்! ஒ!... தீயை நேசிக்கிறது மெழுகு வர்த்தி! - மெழுகுவர்த்தியின் தியாகத் தூய ஒளியில் ஆண்டவன் மனிதப் பண்பு நிரம்பி வழிந்த தெரேசாவின் தொண்டு உள்ளத்தில் அன்பும் ஆனந்தமும் அமைதியும் நிறைந்து வழிய, அவர் இப்போது பாரதப் பண்பாடு. தழுவி, மூன்று நீல நிறக்கோடுகள் கரை கட்டிய வெண்ணிறப் புடவை தலையை மறைக்க, வெண்மையான முழுக்கைச் சட்டை மேனியை மறைக்க, புதிதான உள்ளத்தைப் .ே ப ல புதியதான உருவத்தையும் பெறலானர்!-இடுப்பில் செபமாலை; இடது புறத்தோளில் அசைந்தாடிய முந்தானே'யில் அன்பான ஏசுநாதரின் பெரியதொரு கீர்த்தியைக் கொண்ட அழகான சிலுவை, சிறியதொரு மூர்த்தியாக அழகாக அசைந்தாடிக் கொண்டிருக்கிறது! - அன்பிற்கு இனிமையான என் தந்தையே! எனக்கென்று எழுதிவைத்த சரியான பாதையைக் காண்பித்து விட்டீர்களே!. என்னே நாளும் பொழுதும் வழிநடத்த, நாளும் பொழுதும் என்னுடன் இருங்கள், எம்பெருமானே! தோத்திரங்கள் ஆத்ம திவேதனம் ஆகின்றன, வங்கத்தின் எளிய புதுமைப் பெண்ணெனப் பொலி கின்ருர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/61&oldid=736374" இலிருந்து மீள்விக்கப்பட்டது