பக்கம்:அன்னை தெரேசா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மெய்ஞ்ஞானத் தவம் ஆரம்பமாகிறது. அந்தச் சேரிப்பள்ளியும் ஆரம்பமாகிறது. w தூய சகோதரி ஆன தெரேசா, மறுபடி ஆசிரியை யாகவும் ஆகிருர். பள்ளிப் பிள்ளைகளுக்கு இனி தெரேசா அன்னையும்தான்!... . சொல்லிக் கொடுத்தார்: அ... ஆ!...” படித்துக் கொள்கிருர்கள்: "...அ. ஆ!...” வங்கமொழி சுருதி பேதம் சீரடைந்து பாடும் பூங்குயில் ஆகிறது. 'அமி. நான்!” படுமி...நீ!’ வங்கம் ஆனந்தக் கூத்து ஆடும்! பள்ளியிலே நாற்காலி இல்லை; மேசையும் கிடையாது. ஏன் கரும்பலகையோ, சாக்குக் கட்டியோ கூட இல்லையே? இல்லாவிட்டால், என்னவாம்? மேலே வானம் இல்லையா? கீழே பூமி இல்லையா. என்ன? அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும், ஆங்கு ஒர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது அல்லவா? பள்ளித் தலத்தில் கோயில் கொண்டிருந்த ஐந்து குழந்தைகளே-குழந்தைத் தெய்வங்களைக் காணக் காண, தெரேசாவுக்குக் கரை காணுத களிப்பு மிஞ்சியது: புன்சிரிப்பு எஞ்சியது. என்னுடைய பள்ளிக்கான சின்னஞ்சிறிய இடத்தையும் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தை களையும் தேடிப் பிடிப்பதற்கு என்னபாடு பட்டேன்! இன்னமும்கூட, என் கால்கள் கெஞ்சுகின்ற னவே? ஒரு சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/64&oldid=736377" இலிருந்து மீள்விக்கப்பட்டது