பக்கம்:அன்னை தெரேசா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அன்று தேவாலயத்தில் நடைபெற்ற பு னி த சூசையப்பர் பெருநாள் விழாவில் அன்னை' யென்று விளிக்கத் தொடங்கியது மக்கள் உலகம். எதிரொலி கிளம்பிய ஆலயமணிச் சத்தத்தில், அன்னை யான அன்னை தெரேசாவின் அமைதி மேலோங்கியது; அன்பு மேலோங்கியது. கதிர் முத்தங்கள், இனிக்கின்றன. கல்கத்தா எனும் பெருநகரில், அது ஒரு சிறு சந்து. கிரிக் சந்து என்று பெயர். அங்கே, 14 ஆம் எண் வீடு; பழைய மன. ஆல்பர்ட் கோமஸ் சொந்தக்காரர்; மனிதாபிமானி. இந்தப் பாம்புச் சந்து வீட்டின் சிறிய மாடியில்தான் இப்போது தெரேசா அம்மை வசிக்கிருர்! அன்பை வாழவைக்க இடம் தேடி எத்தனை நாட்கள், எத்தனே தூரம் நடந்தேன்!- கைகால்கள் ஒய்ந்து விட்டன! பாவம், ஏழைகள்!- அவர்கள் உண்ண உணவுக்கும் தங்க நிழலுக்கும் அன்ருடம் எத்தனை எத்தனை கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது! தாட்குறிப்பு நிறைகிறது! தெரு வாசற்புறத்தில், காலடி ஓசை கேட்டது. தெரேசா அன்னையாகி, ஜபமாலையை உருட்டிய வராக, மேலே மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தார்; விழிகளில் ஆச்சரியம்: ஓ.சுபாஷ்ணி' மரப்படிக்கட்டை ஒரே எட்டில் தாண்டிப் பாய்ந்து கீழே ஓடிவந்தார். வாலைக்குமரி சுபாஷிணிதாஸ், "மதர்!’ என்று. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூவி அழைத்தவண்ணம் அன்பின் வண்ணம் நிறைந்திட்ட புண்ணியவதியின் பாதங் களில் நெஞ்சத்தைத் தஞ்சம் வைத்து வணங்கி எழுந்தாள். அன்னையின் நலம் விசாரித்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/68&oldid=736381" இலிருந்து மீள்விக்கப்பட்டது