பக்கம்:அன்னை தெரேசா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சோதனை நாட்கள்-சாதனை நாட்கள் அணிவகுத்து, வணக்கம் கூறுகின்றனவே! o ஆமாம்; அது மோதிஜில் சேரியேதான்!-எல்லோரும் ஒர் நிறை என்னும் படியான பொது விதியின் தார்மிக மான நியதியுடன் ஆண்டவனல் படைக்கப்பட்ட மக்களில் சிலர் அல்லது பலர், சமுதாயத்தால் படைக்கப்பட்டம் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பலியாகி, அல்லது, பலியாக்கப் பட்டு அங்கேதான் நித்த நித்தம் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்! ஆகவே தான், சொர்க் கமும் நரகமுமான இந்த மண் உலக வாழ்க்கை, அந்தச் சேரி மக்களைப் பொறுத்தமட்டில் வெறும் நரகமாக மாத்திரமே அமைய நேர்ந்தது; அமையவும் முடிந்தது. அன்பு, அறம், இரக்கம், கருணே, தயை, தாட்சண்யம், பாசம், தேசம் போன்ற மனிதப் பண்பின் பல்வேறு மன உணர்வுகள் புது வெள்ளமாகப் பெருக்கெடுத்த பரிசுத்த மான இதயத்தினின்றும் அணே கடந்த வெள்ளமாகச் சுடு நீர் பெருக்கெடுத்த இருகண்களை எட்டுத் திக்குகளிலும் பரப்பியும் விரித்தும் சேரிக்காட்சிகளே நேருக்கு நேர் நிதர் சனமாகத் தரிசித்த தெரேசா புண்ணியவதியான ஓர் அன்புத்தாயின் பரிவோடும் பச்சாதாபத்தோடும் சேரி வாழ் மக்களுக்காக உருகிக்கரைந்து, அந்தச் சேரித் தெய் வங்களுக்காகப் பிரார்த்தனையும் செய்தார், தெரேசா. அப்போது, அங்கே, நல்ல பூமியின் அமைதி அரசாட்சி செய்தது. - - . . . . . ." . . . . . . - சேரிக்குடிப் படைகள் அத்தனை பேரும் கண்காளுத தெய்வத்தைக் கண்ணுக்குக் கண்ணுகக் கண்டுவிட்ட பாவனையில் புதிதாய்ப் பிறந்த அமைதியோடும் ஆறுதலோடும் அன்னையையே தொடுத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/72&oldid=736386" இலிருந்து மீள்விக்கப்பட்டது