பக்கம்:அன்னை தெரேசா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இருந்த பணம் வெறும் ஐந்தே ஐந்து ரூபாய்தான்!-நான் தொடங்கிய பணி இயேசுவின் பணி; எனவே, என் பணி யைத் தடையின்றி நடத்தவும், தடங்கலின்றி வழி நடத் தவும் என் தெய்வத்துக்கும் பொறுப்பு உண்டென்றும் நான் நம்பினேன். என்னுடைய நம்பிக்கை வீண் போக வில்லை. எனது பரிசுத்தமான நற்பணியின் அருமையை உணர்ந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள், அறிந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்ததை- தங்களால் முடிந்ததைப் பொருளாகவும் பணமாகவும் என்னிடம் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் எதுவுமே இல்லாத ஏழை எளிய வர்க்கு அப்படி அப்படியே கொடுத்தேன்! என் அன்புப் அணியில் எனக்குத் துணைநிற்கவும் என் பழைய மாணவிகள் அணி சேர்த்து, அணி வகுத்து வந்து சேரலாயினர். பின், என் இலட்சியக்கனவு வெற்றி முகம் நோக்கி ஏறுநடை போடக் கேட்க வேண்டுமா, என்ன?... எல்லாம் என் இயேசுநாதரின் கருணதான்:- நான் என்ன, வெறும் உயிர்ப்பிண்டம் தானே?” அன்பின் வடிவம் எடுத்துத் தியாகத்தின் சுடர் ஏந்திய தவத்திருவாம் அன்னே தெரேசா ஆரம்பித்த * aysyl Geir grgatř56i' (Missionaries of Charity) arsirgub மக்கள் நலச் சமுதாய அன்புப் பணி அமைப்பு, 1950 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7 ஆம் நாளில், கல்கத்தாவில் அன்னை தங்கிவந்த கிரீக் தெருவில் 14 ஆம் எண் கொண்ட இல்லத்தின் அந்த மாடியறையில் செயலாற்றும் அதிகார பூர்வமான ஓர் இயக்கமாகக் கல்கத்தா உ யர்நீதி மன்றத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் பட்டது! அன்னையின் அன்புத் தூதுவர்கள் செயலாற்றிவந்த மக்கள் நலச் சமூகப் பணிகள் கல்கத்தா நகரம் முழுவதிலும் பரவலாயின. * ..." . . . . . . . . . of அதுபோலவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/74&oldid=736388" இலிருந்து மீள்விக்கப்பட்டது