பக்கம்:அன்னை தெரேசா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 'புனித இதயம் என்னும் பொருள் கொண்டு, 'திர்மல் ஹ்ருதய்' என்னும் பெயர் பூண்ட இறப்போர் நல இல்லம் நாளும் பொழுதும் வளரத் தொடங்கி, சாவின் சந்நிதியைத் தேடியவர்களும் சாவின் சந்நிதா னத்தை அடைந்தவர்களும் பெருகத் தொடங்கி, அன்னே தெரேசாவின் அன்புப் பணிகள் தீவிரம் அடைந்த நேரத்திலேதான், சோதிப்புக்கள் பல வழிகளிலிருந்தும் கிளைத்தெழத் தொடங்கின. • ஒரு நாள்: இராமகிருஷண பரமஹம்ஸர் போன்ற மகான்கள் அந்நாளில் இதயந்தோய்ந்த பக்தி செலுத்திவந்த காளிக் கட்டம் கோயிலைச் சார்ந்த பூசாரிகள் மற்றும் மதவாதி களில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, அன்னை தெரேசாவின் அன்புப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புரட்சி செய்யத் தலைப்பட்டனர்: சமூகத்தால் கைவிடப் பட்டவர்களையும், சமூகத்தினின்றும் ஒதுக்கப்பட்டவர் களையும் இங்கே சாவதற்கென்றே கொண்டு வந்து சேர்த்து வரும் இந்தப் பெண்மணி காளி அம்பிகையின் புனிதத் தையே நாசப்படுத்தி வருகிருள்; இந்த அம்மணியை இவ்விடத்தினின்றும் உடனடியாகத் துரத்த வேண்டு: மென்பதே எங்களது இந்தக் கண்டனச் செயல் முறையின் நோக்கம். இந்த ஏழைகளையும் ஆனதை களையும் கிறிஸ்த வர்களாக மாற்ற வேண்டுமென்பதும் இந்தப் பெண்ணின் அந்தரங்கமான திட்டமாகும். ஆகவேதான், தெரேசா அம்மணியை இங்கிருந்து விரட்டியடிக்க விரும்புகிருேம்; அவளும் அவளது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இங்கிருந்து நகரும் வரையிலும் நாங்கள் ஒயவே மாட்டோம்; ஒழியவே மாட்டோம்! ஜெய், காளி மாதா!" ஒலிகள் எதிரொலிக்கின்றன. விடிைகள், நிமிடங்கள் ஆகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/81&oldid=736396" இலிருந்து மீள்விக்கப்பட்டது