பக்கம்:அன்னை தெரேசா.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 கவோ எந்த ஆஸ்பத்திரியும் தயாராக இருக்கவில்லை. இந்த லோகத்திலே, இந்தப் பாவி மீது இரக்கப்பட்டுச் சிசுருகை; செய்யவும் யாருமே இல்லையே, தாயே!- ஆகவே தான், நான் எனது வாழ்க்கையின் அந்திமக் காலத்திலே கடைசி அடைக்கலமாகத் தங்களது பாதார விந்தங்களைச் சரண் அடைய வந்திருக்கிறேன். உங்கள் வடிவத்திலே- நான் நித்த நித்தம் வணங்குகிற அன்னை காளி தேவியையே தரிசிக்கிறேன், அம்மா!' விம்மினர் குருக்கள்; மண்ணில் எலும்பும் தோலுமாக விளங்கிய மார்பு பதிய விழுந்து வணங்கினர்; எழுந்தார்; மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. - அன்பு வெள்ளம் நிரம்பி வழிந்த அன்னையின் நயணங் களிலே கண்ணிர் வெள்ளம் நிரம்பி வழிந்தது. நிர்மலமான இருதயம் படைத்த அன்னை தெரேசா வின் நிர்மலமான அன்புக்கு மெய்ச்சாட்சி வழங்குவதே பேர்லே இயங்கி வந்த இறப்போர் நல இல்லத் திலே, பாவப்பட்ட அந்த அைைதக் குருக்களுக்கும் இடம் கிடைத்தது; நிழல் கிடைத்தது; அருளும் கிடைத்தது; இறக்கும் வரை, அவர் அங்கே அளவற்ற அன்போடும் பரிவோடும் கவனிக்கப்பட்டார்! காளிகோயில் வட்டாரத்தில் வட்டம் அடித்து வந்த மதவெறியர்களும் வன்முறை அடியவர்களும் அன்னேயின் உண்மையான அறப்பணிகளே இதயத்தால் அங்கீகரித்து, இதயம் தெளிவுபெற மேற்கண்ட நிகழ்ச்சி பெரிதும் உதவியதெனவும் சொல்லலாம். அவர்கள் அத்தனை பேரும் மெய்நிலையை உணர்ந்த நிலையில் அன்னையைத் தேடி ஓடிவந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் அன்னையின் அன்புமயமான தெய்வப் பணிகளுக்குக்கிட்டிய மற்று மொரு வெற்றி வாய்ப்பெனவும் சொல்ல வேண்டும். அன்னை கூறுவார்: "ஆண்டவன் என்னுடைய பரிசுத்த மான அன்புப்பணிகளை விரும்புகிருன் உண்மையையும்