பக்கம்:அன்னை தெரேசா.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 உண்மை நிலைமையையும் உணராத- அறியாத போலி விமர்சகர்களால் என் கடமைகளை ஒருநாளும் நிறுத்திவிட முடியாது; முடியவே முடியாது!” - எல்லாம் உணர்ந்த கர்த்தர் பிரானின் கால டியில் நெஞ்சம் ஒடுங்கத் தஞ்சம் அடைந்த அன்னை தெரேசா அன்புக் கண்ணிரால் தமது இதயத்தை மேலும் பரிசுத்தப் படுத்திக் கொண்டபின், தமக்கு ஆண்டவன் இட்ட கட்டளைப்படி தமது அன்புப் பணிகளை மேலும் உற்சாகத் துடன் தொடரலானர். - அன்னையின் உலகம் அன்பின் உலகம் அன்னையின் அன்பு, தெய்விக அன்பு தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ் விலுைம், முடிந்த முடிவில், தருமம்தான் வெல்லும்!- இது படைப்பின் விதி மாத்திரமல்ல; இயற்கையின் நியதியும் இதுவேதான்! அன்பையே உயிராகவும் உயிர் மூச்சாகவும் கொண்டு அறநெறிப் பொதுநலப்பணிகளை மேற்கொண்டு நடை முறைப்படுத்தி வந்த அன்னை தெரேசாவின் ஆக்கப் பணி முறைகள் மென்மேலும் ஊக்கம் பெறலாயின. - 'ஆன்மாவை முடியிருக்கும் ஆடையில் மகிழ்ச்சி மற்றும் துயரம் ஆகிய நூலிழைகள் ஊடும் பாவுமாகப் பின்னப்பட்டிருக்கும்; உடலுக்கும் உள்ளத்துக்கும் நலி வூட்டும் ஒவ்வொரு துயர்த்திற்கும் தொல்லைக்கும் அடியிலே பட்டு இழையென ஆனந்தம் இழையோடிக் கிடக்கும் மனிதன் மகிழ்ச்சியை அனுபவிப்பது மாதிரியே துன்பத்தையும் சந்திக்கக் கடமைப்பட்டவன் ஆயிற்றே! விதி ப்ோடுகிற விடுகதைக்கு விடைகாண இயலாமல் தவிக்கும் மனிதன், வாழ்க்கையின் நேர்பாதையில் நடந்து, தனது வழிநடையைத் தொடர்ந்தால் மட்டுமே, மேற்கண்ட ஆனந்த நிலையின் பொருளை-உட்பொருளைச் சரியாக உய்த்துணரவும் முடியும்' அ. தெ. - 6