பக்கம்:அன்னை தெரேசா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இருபதாம் நூற்ருண்டின் அன்பு அன்பே தெய்வம் ஆனது. அன்புதான் தெய்வம் ஆகிறது. அன்பே தெய்வம் ஆகும். ஆகவே அன்பைத் தெய்வமும், தெய்வத்தை அன்பும் வாழ வைப்பதும் உலகியல் நடைமுறைச் சித்தாந்தமாகவும் ஆவதும் இயல்பு. . - முக்காலமும், மூவுலகமும் உணர்த்திய. உணர்ந்த உண்மையும் இதுவே. உண்மையைப் போலவும் சத்தியத்தைப் போன்றும் தருமத்தையொத்தும் அன்பும் வென்றது; வெல்கிறது; வெல்லும்! எனவே. உலகத்தின் தெய்வங்களும் தெய்வங்களின் மதங்களும் மதங்களின் மக்களும் அன்பின் பேரால் வாழ்வதும் அன்பின் பேரால் வாழ்த்துவதும் இயற்கை ஆகிறது. தாய் இயற்கை-இயற்கைத் தாய் உலகுக்குத் தனிச் சிறப்பான நன்கொடையாகவே ஏலக்காயை வழங்கி யிருப்பதாகச் சொல்லுவது உண்டு. . அது போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/92&oldid=736408" இலிருந்து மீள்விக்கப்பட்டது