பக்கம்:அன்னை தெரேசா.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 இறைவா!-உன்னைப் பாடப்பாட, உன்னுடைய இசை ஞானத்தின் மகிமை எனக்குப் புலப்படுகிறது . உன் இசைவெள்ளம் எங்கெங்கும் பொங்கித் ததும்புகிறது: உன் குரலோடு நானும் இசைந்தும் இணைந்தும் பாடவே நான் ஆசைப்படுகிறேன்!- இயலவில்லையே!- கம்பீரமான உன்னுடைய இசைத் தொனியோடு, கம்பீரம் இழந்த என்னுடைய முனகல் சத்தம் சுருதி சேருவதென்பது எங்ங்னம் சாத்தியப்படும்? உன் இசையில் மயங்கியேதான் நானும் உன்னேடு பாடவிரும்புகிறேன்; என்னல் பாடாமலும் இருக்க முடியவில்லையே?’’ கீதாஞ்சலியில் புனிதச் சிலுவை பொன் நகை செய்கிறது. ஆண்டவன்ரின் சந்நிதானத்தில் அன்னை தெரேசா மறுபடியும் குழந்தை ஆகிருர்! விதியின் ஒரு விளையாட்டு; விளையாடல்: அன்ருெருநாள், அழகானதோர் இளங்காலைப் பொழுதில், அன்னை தெரேசா அவசர காரியமாகக் காரில் பயணம் செய்து கொண்டிருந்த சமயம், சாலையின் திரும்புமுனையில் என்னவோ சத்தம் கேட்டது. உடனடி யாகக் காரை நிறுத்தச் செய்தார்; சத்தத்தை உன்னிப்பாய்க் கேட்கலானர். தெய்வத்தின் உருவமெனச் சொல்லப்படும் குழந்தையின் தீனக்குரலென்பதை உணர்ந்ததுதான் தாமதம். அவரது அன்பு மனம் அந்தப் பச்சைமண்ணுக்காக அனுதாபப் பட்டார்; இதயம் விம்மியது; விழிகள் அழுதன; விதியின் விளையாடலை எண்ணியவர், தீவினையின் திருவிளையாடலையும் எண்ண வேண்டியவர் ஆனர். பச்சை மண்ணின் கதை என்ன?கதி என்ன?- விதி கேட்ட கேள்விக்கு விடை தேட ஏசுபிரானக் கூப்பிட்டார். தேடிய விடை கிடைக்காமல் இருக்குமா, என்ன?-எந்தப் பாவி மகளோ, எப்படியோ