பக்கம்:அன்னை தெரேசா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெற்று ஏனே வீசியெறிந்த அந்தத் தெய்வக் குழந்தையின் -குழந்தைத் தெய்வத்தின் அழுகை வளரவே, ஒடிச் சென்ருர் அன்ன. அலங்கோலமாய்க் காட்சியளித்த குப்பைத் தொட்டியில் காகிதத்தால் சுற்றப்பட்டிருந்த அந்தச் சிசுவைப் பிரித்தெடுத்து, கண்ணிர் முத்தங்களே வாரி வாரி வழங்கினர் அன்னை; அக்கணத்திலேயே, அக் குழந்தைக்கும் அன்னை ஆளுர், சமூகத்தில் நாதியற்றுத் திரிந்த ஆண்-பெண் அைைதகளுக்கும், வழி தவறிய பெண்களுக்கும் சமுதாயத்தில் அன்பு என்பது இன்ன தென்று அறியாமல் ஏங்கித் தவித்த நோயாளிகளுக்கும் வழி தவருமல், வாழ்க்கையில் களைத்த பெண்களுக்கும் கண்கண்ட அன்னத் தெய்வமாக விளங்கி வந்த தெரேசா அன்னே, வேண்டப்படாமலும் விரும்பப்படாமலும் கிடைக்கக் கூடிய சிசுக்களுக்கும் தாயாகத் தீர்மானம் செய்தார்; குழந்தைகள் காப்பகம் ஒன்ற்ைத் திறப்ப தென்றும் தீர்மானம் செய்தார்; இரு வேறு காலக் கட்டங்களில். இருவேறு மனநிலைகளில், ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளை, ஒருருக்கொண்டு செயற்படவும் செயலாற்றவும் தொடங்கி விட்டது என்னும்படியான தெய்வச் செயலில் அடிமுடிகாண வாய்க்காத அமைதி யான ஆறுதலையும் பெறலானர் அம்மையார். 1953-ம் ஆண்டு, அன்னை தெரேசாவின் அன்புப்பணி இயக்கத்தைப் பொறுத்த அளவில் மற்றுமொரு முக்கியத் துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்தது. தெய்வத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளையும் கொண்டாட எண்ணமிட்டிருந்த தெரேசா அன்னை இந்த ஆண்டிலே தான் குழந்தைகளுக்கான பாதுகாப்புஅமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தினர். நிர்மல்மான இந்தச் சிசுபவனத்திற்காக அர்மேனியன் மிக்காடியின் இல்லத்தை அதிகப்படியான - வாடகையைக் கொடுத்து எடுத்துக் கொண்டு, இல்லத்தின் செயல் முறைக்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/96&oldid=736412" இலிருந்து மீள்விக்கப்பட்டது