பக்கம்:அன்னை தெரேசா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. அனதைக் குழந்தைகளுக்கு மத்தியில், தாய் அன்பை அறிந்திடமட்டுமே அதிர்ஷ்டம் செய்த குழந்தைகள், அத்தாயின் அன்பை வறுமையின் நெருக்கடி காரண மாகவும் நெருக்குப்பிடியின் விளைவாகவும் தொடர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல் இருக்கும் பட்சத்திலே, அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் குழந்தை களைப் பெற்ற தாய்மார்களுக்கும் குழந்தைகளின் காப் பகத்தின் வாயிலாக அவசியமான உதவிகளும் ஒத்தாசை களும் வழங்கப்பட்டுவருகின்றன:- இவ்வாறு மேற்கண்ட குழந்தைகள் பெறுகின்ற இன்பம் அக்குழந்தைகளைப் பெற்றவர்களையும் சாருவதும் இயல்பே அல்லவா? திக்கற்ற குழந்தைகளுக்கெல்லாம் தெய்வமாக மட்டு மன்றி, தெய்வத் தாயாகவும் விளங்குகின்ற அன்னே தெரேசாவின் அன்புப் பணி இயக்கம், குழந்தைகளின் காப்பகத்தின் அறப்பணிகளையும் நடத்தி வருவது கண்கூடு, அறக்கொடை நிறுவனங்கள் சிலவற்றைத்தொடர்பு, கொண்டு, அவற்றின் ஆதரவுடன் இங்கே இலவசமாக உணவும் வழங்கப்பட்டுவருகிறது. பசியாலும் பட்டினி யாலும் வாடுபவர்களை உச்சிவேளையில் ஒட்டுமொத்தமாக இங்கே தரிசிக்கலாம்! அதிருஷ்டம் கெட்டு, ஆதரவற்றுப் போய்விட்ட குழந்தைகளுக்கு இங்கே வரக்கூடிய அதிருஷ்டம் மாத்திரம் வாய்த்து விட்டால், பின் அவர்கள் பாக்கியம் பெற்றவர் களாகவே ஆகிவிடுவார்கள்!- பிறந்த மறுகணத்திலேயே நடுத்தெருவில் கள்ளத் தனமாகத் தூக்கிஎறியப்பட்ட கள்ளங்கபடு அறியாத - பெற்ருேரையும் அறியாத பச்சிளங் குழவிகளின் வளர்ப்புப் பணிகள் தனிப்பட்ட அக்கறையுடன் கண்காணிக்கப் படுகின்றன; காப்பகத்தில் இடம் கண்ட அைைதக் குழந்தைகள், வயது வாரியாக வகைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன; உடல் ஊனமற்ற பிள்ளைகளுக்கென்று ஒரு பிரிவு தனியாகவே இயங்கிவருகிறது. தாங்கள் தாய் தந்தையற்ற அைைதக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/98&oldid=736414" இலிருந்து மீள்விக்கப்பட்டது