10
அண்ணாவின்
இந்த உண்மையை எடுத்துச் சொல்லிய நேரத்தில், ஒவ்வொருவரும், ஒவ்வொரு மார்க்கம் காட்டினர்.
உழவர் நிலை என்று பார்க்கிற நேரத்தில் உழவாின் வேதனை, நீர்ப்பாசனமில்லாது அவன் படும் கஷ்டம் — உரமில்லாது தவிப்பது, ஆகியவைகளை மட்டும் அல்ல நான் குறிப்பிட விரும்புவது. இவைகள் திருத்தப்பட்டு விட்டால், எல்லா இன்பமும் உண்டாகி விடும் என்று நம்புபவனும் அல்ல. ஏனெனில், உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் செல்வம், அவர்கள் உழைப்பினால் கிடைக்கும் பலன், நமது நாட்டு மக்களது வாழ்க்கைத் தரத்தை (Standard of Life) உயர்த்தப் போதுமானதாக இல்லை. ஆகவே, விவசாயிகள் விவசாயம் ஒன்றையே நம்பி வாழமுடியாது! பொதுச் செல்வம் வளர, நாட்டு வருவாய் வளமாக.
விவசாயிகள் வேறுதொழில்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம். இதை முன்னாள் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், எத்தகைய தொழில்கள் உழவர்களுக்குத் தேவை என்று குறிப்பிடவில்லை. அப்படிக் கூறினாலும் அவர் குறிப்பிடும் தொழில்களுக்கும் நான் கூற விரும்பும் தொழில்களுக்கும் வித்தியாசம் இருக்கலாம். அவர் காந்தீய முறையில் குடிசைத் தொழில்களைக் கூறலாம் — அது பயன் தருமா என்று கேள்வியைக் கிளப்பலாம் நான்!
ஆனால், தொழில்கள் எவை யெவை என்று கருதுவதிலே, கருத்து வேற்றுமை இருந்தாலும் இருக்க முடியுமே யொழிய உழவர் பெருமக்களுக்கு