12
அண்ணாவின்
தங்களது உத்தமப்போக்கில், நேர்மைக் குணத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு. எனினும், தாங்கள் காங்கிரசை விட்டு விலகிவந்து, இந்த நல்ல காரியத்தை துவக்கி வையுங்கள்" என்று ஏன், இதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்றால், அவர் காங்கிரஸிலிருந்து கொண்டே விவசாயிகளுக்குப் பாடுபடுவதாக, முன்வந்தால் அவர் கூறியதைப் போல என் போன்றார் தவறாக எண்ணிவிடக்கூடும். சரிந்து போய்க்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குப் புது வலிவு தேட, புதுவழி செய்கிறாரோ — என்று பலர் ஐயுற இடமேற்படக் கூடும். ஆகவே தான், அவர் காங்கிரசை விட்டு வெளியேறி, விவசாயிகளுக்காகத் தனது காலத்தைச் செலவிட வேண்டுமென்று விரும்புகிறேன்!
உழவரின் உண்மையான வேதனையை உணராத அரசியல்வாதிகளைவிட வெளியிலே தங்கள் வேதனையைக் கூற திறமையற்றுக்கிடக்கும் விவசாயிகளின் துயர் துடைக்க அவரைப் போன்ற தலைவர் கிடைப்பது அரிது.
ஆகவேதான் என்னுடைய இந்த ஆசையை அவருக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
உள்ளத்தில் தூய்மையோடு எந்த நல்ல முயற்சியிலீடுபட்டாலும், இந்த நாட்டிலுள்ள இன்றைய துரதிா்ஷ்டம், எவரையும் சந்தேகக்கண்களாேடு பார்ப்பதாகவே ஆகிவிட்டது. இந்தப் பொல்லாத உலகில் நல்லோர் என்றால்கூட சந்தேகம் கொள்ளாதோ-