16
அண்ணாவின்
இதோ இருக்கிறது மின்சாரம், ஒளி—ஒலி, இரண்டையும் நமக்குத் தந்த வண்ணமாக, சிறு கம்பியின் மூலமாக இத்துணை நன்மையும் நமக்கு கிடைக்கிறது. அதே போல கடவுளால் நமக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்றால் வரவேற்காமலா இருப்போம்?
இதோ நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் குரலை துாரத்திலுள்ளாோ் கூடக் கேட்குமாறு, மின்சாரம் செய்து கொண்டிருக்கிறது. சில சிமிடம் திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என் குரலை நீங்கள் கேட்க முடியாது. அப்போது, அதன் அருமை தெரியும், எனவே, இத்தகைய நன்மையைத் தரும் மின்சாரம் கூடாது என்றா கூறுவாேம்? கூறத்தான் நாங்கள் என்ன பித்தர்களா?
எமது பணி, நாட்டுப்புற மக்களுக்குத் தேவையான புத்தறிவைப் போதிப்பதுதான். நமது நாட்டில் நுாற்றுக்குத் தொண்ணுாறு பேர் கல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார்கள் முன்னாள் முதலமைச்சர். அவ்வளவு பெரும்பான்மையான கல்வியற்ற மக்களுக்கு கல்வியைத் தருவது என்பது சாத்தியமா? வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் முடியுமா? பலர் வயோதிகப் பருவத்தில் இருப்பவர்கள், குடும்ப அல்லல்களில் உழல்வோர் பலர். 'உழைப்பு! உழைப்பு!" என்று அவர் தொகை கோடானகோடி. இப்படியிருக்கையில் எல்லோருக்கும் பாட புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிப்புச் சொல்லித் தருவது, சாத்தியமா? முடியாது — எனவேதான் பொது அறிவு, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்படியான பெரும் பணி-