பக்கம்:அன்பழைப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

17



யைச் செய்து வருகிறாேம். கட்டிடமில்லாத கல்லுாரிகள்தான் - நாங்கள்!

நமது மக்கள் எது தேவையில்லையோ அதைப் பற்றி அதிகம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் எதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமாே அதைப் பற்றி அக்கரை கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக டிராக்டரைப் பற்றி, ஒரு விவசாயியை "இயந்திரக் கலப்பை தெரியுமா?" என்று கேளுங்கள்- தெரியாது' என்பார். காட்டுங்கள் - அதைப் பற்றிக்கவலை கொள்ளமாட்டார். எங்கே செய்தது யார் கண்டு பிடித்தது, எப்போது கண்டு பிடித்தது. என்றெல்லாம் கேட்க வேண்டுமென்கிற ஆசையும் எண்ணமும் அவருக்கு எழும்பாது.

ஆனால், அதே உழவர் ரயிலில் போய் கொண்டிருக்கிறார். தூரத்திலே குன்று ஒன்று தெரிந்தது. அதன் உச்சியில் கோபுரம் ஒன்று தொிந்தால் கன்னத்தில் போட்டுக் கொண்டு பக்கத்திலே இருப்பவரைக் கேட்பார். என்ன கோயில் அங்கேயிருக்கும், சாமி எது, அதற்கு எப்போது திருவிழா என்றெல்லாம் பக்திசிரத்தையோடு கேட்பார். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அவர் கோயில் விசாரணை செய்வது தவறு என்றாே கூடாது என்றாே நான் கூறவில்லை! ஆனால் இதில் காட்டப் படுமளவு சிரத்தை, என் இயந்திரக் கலப்பையிடம் காட்டப்படவில்லை

இந்த மனப்பான்மையைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/18&oldid=1502010" இலிருந்து மீள்விக்கப்பட்டது