உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அண்ணாவின்


ஆனால், இதை யெல்லாம் செய்ய முற்படும் போது நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது!

இதுவரையில், கிராம மக்கள், எத்தனை உலகங்கள் என்று கேட்டால் அதல, சுதல, பாதாளம், என்றே கூறிப் பழக்கப்பட்டவர்கள். அதையே நாமும் நம்பினோர்களாக இருந்து கொண்டு, ஆப்பிரிக்காவின் நிலை, அமெரிக்காவின் பெருமை, ஆஸ்திரிரேலியாவின் சிறப்புப்பற்றி கூறமுடியுமா?

ஆகவே, பொது அறிவு பரப்ப முற்படும் போது, பிறநாட்டின் படத்தைப் போட்டுக் காட்டும் போது, அங்கே வாழும் மக்கள், நிலை, அவர்கள் வணங்கும் தெய்வம் ஆகியவைகளையும் படங்கள் மூலமே விளக்க வேண்டும்!

இது அமெரிக்கா படம்-இங்கு வாழ்வோர் கிறிஸ்தவர்கள் — அவர்கள் வழிபடுவது இயேசுநாதரை என்று நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதே நேரத்தில் நமக்குள்ள மூலதெய்வங்கள் மூன்று சில்லரைத் தெய்வங்கள் முப்பத்தி முக்கோடி என்பதையும் எடுத்துக் கூற வேண்டும்!

இதை நான் கூறும் நோக்கம், சாமி குறைய வேண்டும் என்பதல்ல சாமிகளுக்காகச் செலவழியும் நேரத்தையும் நினைப்பையும் குறிப்பிடத்தான்.

கண்காட்சிகள் மூலம் கிராம மக்களுடைய பொது அறிவைத் தட்டி எழுப்ப வேண்டும். அதே நேரத்தில் நாம் கூறும் பல கருத்துக்களை யெல்லாம் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/21&oldid=1661854" இலிருந்து மீள்விக்கப்பட்டது