பக்கம்:அன்பழைப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

21



ஜீரணித்துக்கொள்ள வசதி செய்து தரவேண்டும். நமது கிராம மக்களுக்கு, எது நல்லது, எது கெட்டது என்பதைப் பருத்தறியும் திறன் நிறைய உண்டு. உரைத்துப் பார்க்கவும், நிறை போட்டுணரவும் சலித்துத் தெரியவும் விவசாயிகள் நன்கு அறிவர்!

ஆகவே, இதுபோன்ற நல்ல ஏற்பாடுகள் மூலம் அவர்கள் பொது அறிவை வளர்த்தால்தான் கிராமம் நகரம் என்ற பேதம் தெரியாது!

இன்றைய சமுதாயத்தில் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்றையொன்று துாற்றிக்கொள்வதும் பழித்துக் கொள்வதுமாக இருக்கின்றன. இந்த உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. நகரம் - கிராமம். இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள பிளவு இருக்கிறது. இரண்டையும் நிரப்ப, பாலம் அமைக்க நாம் பாடுபடவேண்டும், இது சாதாரணமானதல்ல. மிகமிகச் சிரமமான காரியம்! இதிலே ஓமந்துாரார் நுழைந்தால், அவரோடு ஒத்துழைக்க நாம் தயாராக இருக்கிறாேம். அவர் நல்லதொரு பெயரை-மக்களிடைப் பெற்றுவிட்டார். காங்கிரசிலே இருந்து பணி புரிந்து, அதன் பலனையும் பெற்றுவிட்டார். எனவே மனதிலே புதுத்தென்போடு, ஜெயகோஷத்தோடு வரலாம். விவசாயிகள் சார்பாக நின்று போராடவும், அலைக்கழிக்கும் அரசியல் கட்சிகளின் வலைகள் வீசப்பட்டாலும் அவர் தயங்கார்.

இதுபோன்ற மகத்தான பணியை அவர் போன்ற நல்லவர் தான் ஏற்கவேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/22&oldid=1502022" இலிருந்து மீள்விக்கப்பட்டது