உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அண்ணாவின்


ஒருநாள் பேசினார், சென்னை மேல் சபையில், ஆளவந்தார் போக்குக் குறித்து. அன்று அரசியல்வாதிகள் பலரிடையே புயலும் தென்றலுமல்லவா வீசிற்று! பலப்பலவல்லவா, எண்ணத் துாண்டிற்று அந்தப்பேச்சு! மக்கள், இனி என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் ஆசையல்லவா, அரும்பிற்று. அந்த அளவுக்கு, அவருடைய வார்த்தைகளிலே உரம் இருக்கிறது. அவருடைய அறிவும் ஆற்றலும் நல்ல உரமாக இக்நாட்டு ஏழைக் கிராமமக்களுக்குப் பயன்படவேண்டும். ஆகவேதான், அவர் பழைய கூடாரத்தை விட்டு, வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டேன் காங்கிரசிலேயே இருந்து கொண்டு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே என்று கருதினால், காங்கிரசிலே இருந்து கொண்டு அதற்கு வரும் கெட்ட பெயரை மறைக்கத் தான் இப்புது முயற்சி என்றே எண்ணத்தோன்றும் என் போன்ற பலருக்கு. ஆகவே, இந்த அருமையான முயற்சியை அவரே தாங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்!

நமது விவசாயத் துறையிலே. நிலத்திலே நேரடியாக உழுபவர்கள், மேற்பார்வை பார்ப்பவர்கள், கண்ணெடுத்தும் பாராது களத்திலே நெல் கண்டு முதலாயிற்றாே என்று கணக்குக் கேட்போர், காரைவிட்டு இறங்காது நகர்ப்புறத்திலே, கிராமம்-அங்கே எனக்கு என்று கூறிக்கொண்டுலவும் நாகரீகச் சீமான் எனப் பலவகையினர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலே உள்ள வித்தியாசம் — மிகமிகச் கேடு தருவதாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/23&oldid=1661857" இலிருந்து மீள்விக்கப்பட்டது