உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பழைப்பு

23


என்னுடைய கருத்து உண்மையான விவசாயிகளிடமே. யாா் நிலத்தில் இறங்கி பாடுபடுகிறாா்களாே அவர்களிடமே, நிலம் இருக்கவேண்டுமென்பதுதான். இந்த என் கருத்தை முன்னாள் முதலமைச்சருடைய சிந்தனைக்கு வைக்கின்றேன்!

ஒரே இடத்தில் நிலம் அதிகம் குவிந்து கிடப்பதும், பலாிடத்தில் சிறுசிறு நிலங்கள் இருப்பதும், கூடாது. அதனால் விவசாயம் முன்னேற்றம் ஏற்பட வழி இல்லை. அது மட்டுமின்றி, நவீன முறைகள் விவசாயத் துறையிலே புகுத்தப்படவேண்டும். இதற்கான முயற்சியிலே சா்க்காரே ஈடுபடவேண்டும் என்பது எனது விருப்பம். உழவு முறையில் சர்க்கார் பத்துக் கிராமங்களைத் தோ்ந்தெடுத்து அங்கே பரீட்சாா்த்தக் கூடங்களை ஏற்படுத்தவேண்டும். யாருக்கு உண்மையாவே விவசாயம் தொியுமாே அவா்கள் வசமே விவசாயக் கருவிகள் நிா்வகிக்கும் பாெறுப்பு அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் ஏழை கிராம மக்களும் விவசாயப் பாெருள்களைப் பெற்று நலம் பெற முடியும். இலாகத் தலைவா்கள் வசம் பாெறுப்பு இருப்பதால் நிலம் அதிகம் படைத்தோாின் தா்பாரே நீடிக்கும்! இதுபோன்ற பலன்களை விவசாயிகள் பெற வேண்டுமென்றால் அவா்களுக்குள்ளே நல்ல கட்டுப்பாடான சங்கங்கள் மிகமிக அவசியம்!

அப்படிக் கட்டுப்பாடோடு--கடமையுள்ளத்தோடு தங்கள் கோரிக்கைகளைப் பெற நல்ல கிளர்ச்சிகள் செய்தால், தப்பாக நினைத்து, தங்களை எதிர்ப்பதாக எண்ணி ஆட்சி நடத்துவோர் அடக்குமுறைப் பாதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/24&oldid=1661859" இலிருந்து மீள்விக்கப்பட்டது