பக்கம்:அன்பழைப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அண்ணாவின்



சென்றால் அதைக் கண்டிக்கத் தவறக்கூடாது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்திலே விவசாயிகள் சங்கம் அமைத்தனர். ஆனால் அதிலே பொதுவுடமைவாதிகள் புகுந்தனர். விளைவு என்ன ஆயிற்று? வயலிலே பிணம்! வாய்க்காலிலே இரத்தம்! போலீஸ் தர்பார்! பெண்களின் கூக்குரல்! அழுகுரல் - ஆபாசமான காட்டுமிராண்டித் தர்பார்! தலைதுாக்கி தாண்டவமாடிற்று!

இதில் யார் செய்தது சரி, எங்கு நியாயம் என்பதையல்ல நான் வேற விரும்புவது!

விவசாயிகள் மத்தியில், அவர்கள் வேதனை களையச் சொல்வது என்பது வெறும்பட்டாசு கொளுத்துவது போன்றதல்ல; தீப்பந்தம் தாங்கி வெடிமருந்து சாலைக்குள் நுழைவதுபோல ஆபத்து நிறைந்தது!

ஆகவேதான், தீப்பந்தம் அங்கே நெருங்குதல் கூடாது; அரசியல்வாதிகள் போகக் கூடாது, என்பதை நான் அவ்வளவு வலியுறுத்துகிறேன்!

இந்தப் பொல்லாத உலகிலே எவ்வளவு நல்லவரானாலும் மாக, மரு கற்பிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். இல்லை என்றால், முன்னாள் முதலமைச்சராகிய ஓமந்தார் ராமசாமி அவர்கள் மேல்சபையில் பேசியபோது, சர்க்காரின் போக்கு இப்படியே போய்க் கொண்டிருந்தால் போராட்டம் துவக்கும் படி நேரும் என்று வேதனையோடு கூற, இந்நாள் முதலமைச்சா் 'குமாரசாமி ராஜா' என்ன போராட்டம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/25&oldid=1502058" இலிருந்து மீள்விக்கப்பட்டது