உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பழைப்பு

27


னாராம். அதற்கு லெனின், 'கவலைப்படாதீர்கள். எனக்குப்பிறகு மின்சாரம் இருக்கிறது' என்றாராம்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மின்சார வசதி பூரணமாகக் கிடைத்து விட்டால் மக்கள் வாழ்வில் கவலை ஏற்படக் காரணமில்லை! ஆகவே, அது போல நமது நாடெங்கும் மின்சார வசதி பரவவேண்டும்; விஞ்ஞான அறிவு மூலம் அது பயன் படுத்தப்பட வேண்டும்!

விஞ்ஞான அறிவை நம்மவர் பயன் படுத்த வேண்டும் என்று கூறுகிற நேரத்தில் இன்னொன்றும் கூற விரும்புகிறேன். அது, நம்மவர் விஞ்ஞானத்தை மதிக்கப் பழகவேண்டும். கிராம வாசிகள் இன்னும் சாவடிப் பிசாசு, சத்திரத்துப் பேய் — பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்களே யொழிய, ஒலி பெருக்கி, கம்பியில்லாத் தந்தி, கப்பல், கடலுக்கடியில் செல்லும் கப்பல் ஆகியவை குறித்துச் சிந்திக்கவும் இல்லை!

இந்த விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தோர் எத்தனை நாட்கள் இரவிலே துாங்காமல் புரண்டிருப்பர். எத்தனை காலம், தங்களுடைய அரும்பணி மூலம் இந்தச் சாதனங்களைக் காண கஷ்டநஷ்டப்பட்டிருப்பார். பட்ட வேதனை! துாங்காத இரவுகள்! தாங்கிய தொல்லைகள்! கொஞ்சமாகவா, இருந்திருக்கும்!

சாதாரணமாக இந்த ஒலிபெருக்கியைச் செய்தவர், நினைத்ததுமா செய்து முடித்திருக்க முடியும்! பல தடவைகள் முயற்சி தோல்வியில் முடிந்து, கடைசியில் ஒரு தடவை வெற்றி கண்டிருப்பாா்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/28&oldid=1661873" இலிருந்து மீள்விக்கப்பட்டது