அன்பழைப்பு
29
அப்படிக் கூறுவோரைக் கேட்கிறேன். இப்போது மட்டுந்தானா அழிவுக்கான கருவிகள் இருக்கின்றன? முன்பிருந்ததாகக் கூறப்படும் மோகனாஸ்திரம், அக்கினியாஸ்திரம், வருணாஸ்திரம் எல்லாம் அழிவுக்குத்தான் அப்போதும் பயன் பட்டதாகப் படிக்கிறாேமேயாெழிய, எங்கேயாவது எடுத்துக்காட்ட முடியுமா. 'மழையில்லாமல் மக்கள் அவதிப்பட, உடனே வருணஸ்திரம் விடப்பட்டது. மக்களுக்கு மழை நீர் கிடைத்தது' என்பதாக. ஆகையால், அழிவுக்குத்தான் அப்போதும் பயன் பட்டன!
ஆகவே, வெளிநாட்டு விஞ்ஞானிகளை அஞ்ஞானிகள் என்று துாற்றுவதால் நம்மையே நாம் கெடுத்துக் கொள்கிறோம். நன்மையும் தீமையும் எங்கும் எதிலும் உண்டு. ஆகவே உண்மையான விஞ்ஞானத்தின் மேன்மையை நாம் மதிக்க வேண்டும்!
விஞ்ஞானத்தால் நமது நேரமும் உழைப்பும் எவ்வளவாே மிச்சமாகிறது! பத்து ஆண்டுகளுக்கு முன் ராேடு போடுவதென்றால், ஒரு பெரிய கருங்கல் உருளையை பத்துப் பனிரெண்டுபோ், மாடுபாேல இழுப்பா், ஆனால் இப்பாேதாே சிறு மிஷின் — ஒரு உருளையல்ல! மூன்று உருளையை உருட்டுகிறது!
விஞ்ஞானத்தின் மூலம், குறைந்த உழைப்பு - அதிக பயன் (Minimum Labour Maximum Benefit) பெற்று வருகிறாேம், நாம். இது சாதாரண மானதல்ல!
எனவே விஞ்ஞானத்தால் நாம் பெறும் லாபமும் வசதியும் அதிகம். இந்த நேரத்தில் நீங்கள் ஒன்று உணரவேண்டும், விஞ்ஞானிகள் எவரும் சுயநலக்காரா்கள் அல்ல தான் கண்டுபிடித்த உண்மைகளை உலகம் பூராவுக்கும், பொதுவாக்கிவிட்டே போயிருக்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கும் நம்முடைய நிலைமைக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள்!