பக்கம்:அன்பழைப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அண்ணாவின்



தலைவலிக்கு 'தைலம்' தருவான், நமது நாட்டுப் புற வைத்தியன். 'என்ன தைலம்? இதை எப்படி செய்தீர்கள்?' என்று கேட்டுப் பாருங்கள் விபரம் எதையும் சொல்ல மாட்டான் உங்களுக்கு!

அதேபோல, ஒரு பச்சிலையைப் பறித்து வந்து தருவான். 'இதன் பெயர் என்ன? - கேளுங்கள்! சொல்லமாட்டான். 'பச்சிலையின் பெயரைச் சொன்னால் பலிக்காது-வியாதி போகாது' என்று விவரிப்பான்.

மேல்நாட்டு விஞ்ஞானிகள் இப்படிப்பட்டவர்களா?

இதோ இருக்கும் ஒலி பெருக்கி ஒன்றே ஒன்று மட்டும் தயார் செய்யப்பட்டு அது நமது நாட்டுச் சுய நலக்காரன் ஒருவனிடம் சிக்கியிருந்தால் இது என்ன தெரியுமா? இதுதான் 'சிவபெருமான்' அருள் என்பான். 'இந்தா, வி தியை இட்டுக் கொள்' என்றழைப்பான் கைலாயத்திலிருந்து பேசச் செய்கிறேன்' என்பான். 'கேட்கிறதா சப்தம்'-அவன் கேட்பான். 'சப்தம் கேட்கவில்லையா, நீ பாபி' என்பான். இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி, அந்த எத்தன், எவ்வளவு கோடி சம்பாதித்திருப்பான் இதற்குள்?

இப்படிப்பட்டவர்களா விஞ்ஞானிகள். இல்லையே! தான் கண்டதை உலகுக்கே அல்லவா தந்திருக்கிறாா்கள்!

விஞ்ஞானத்தாலே, செல்வம் கொழிக்கவும், அவன் கண்டு பிடித்ததைப் பலர் காசாக்கவும் செய்வான் விஞ்ஞானி, ஆனால் அவன் வாழ்வு, செல்வத்தைக் கண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? வேதனை - ஏழ்மை - கையில் காசில்லாத கொடுமையால் கஷ்டப்பட்டிருக்காமல், சுகத்தாேடேயா இந்த ஆராய்ச்சிகளை நடத்தியிருப்பான் என்று நினைக்கறீர்கள். இந்த அருமையை, அத்தகைய விஞ்ஞானிகளின் பெருமையை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/31&oldid=1502141" இலிருந்து மீள்விக்கப்பட்டது