உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அண்ணாவின் அன்பழைப்பு


கள் கஷ்டப்பட நேர்ந்து.ண்டு அப்போதெல்லாம் 'இவ்வளவு நல்லவரா இப்படிச் செய்கிறார்' என்று கூறிக் கொண்டோமே தவிர, 'அவர்தானே —அப்படித்தான் செய்வார் என்று நாங்கள் கூறியதில்லை. சமூக நன்மைக்காக, அறநிலைப்பாது காப்புச் சட்டம் போன்றவைகளை அவர்கொண்டு வந்து நிறைவேற்றியபோதும் , ஜமீன்தாரி முறை ஒழிப்பு மசோதா கொண்டுவந்த போதும் எங்களது— இயக்கம் அவரை ஆதரித்து நின்றது!—'தேவை' என்று நாங்கள், குரல் எழுப்பினாேம்.

ஓமந்தூரார் எதிர்கட்சியினராலேயே உத்தமர் என்று கூறப்படுமளவு , தமது நேர்மையால் நல்ல பெயர் எடுத்தவர் !

எதிர்க்கட்சிகளின் அடிமூச்சுக் குரலைப் பரிசாக பெற்றவர் அவர்!

'ஓமந்தூரார் காலத்திலுமா....?' என்று, எங்கள் —மீது சட்டம் பாய்ந்த போதெல்லாம் அடி மூச்சுக்குரலோடு கேட்டோமே தவிர, 'ஓமந்தூராரா — அவர் அப்படித்தான் செய்வார். அவர் ஆட்சி அப்படித் தான் இருக்கும்' என்று ஒருதடவைகூட கூறியறியோம் !

எந்த அரசியல் தலைவரும் பிறகட்சியின் , அன்பையும் பாராட்டுதலையும் பெறுவதென்பது — சாத்தியமில்லாத காரியம்.

ஆனால் ஓமந்தூரார் அந்தப் பரிசைப் பெற்றார்! பலவீனர்கள் பாராளுவோராக அமர்திருக்கும் இந்த நேரத்தில், அவர்களுடைய போக்கைச் சுட்டிக் காட்டி, ஏழை கிராம மக்களுக்குப் பாடுபட நாங்கள் — எப்போதும் தயார் என்பதை அவருக்குக் கூறிக் கொள்வதோடு, இந்த நற்சேவைக்காக அவரது பணி பயன்பட வேண்டும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/33&oldid=1661880" இலிருந்து மீள்விக்கப்பட்டது