உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'அன்பழைப்பு'


தலைவர் அவர்களே! தோழர்களே! உழவர் பெருங்குடி மக்களே உங்களனைவருக்கும் முதற்கண் என் வணக்கம்.

உழவர் பிரச்சினை பற்றிப்பேச, பல கட்சிகளைச்சேர்ந்த நாம் இங்கே கூடியிருக்கிறோம். ஒவ்வொரு இலட்சியத்துடன் பாடுபடும் நாம், ஒரு பொது விவகாரத்தில் ஒன்று படுத்தப்பட்டுள்ளோம். இந்த முயற்சி சிறந்த முயற்சி, இதுபோன்ற கூட்டுமுயற்சி அரசியல் கட்சிகளிடையே, அடிக்கடி ஏற்படவேண்டும் என்று ஆசைகொண்டவன் நான். தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதும், ஒரு கட்சியின் நோக்கங்களை வேறெரு கட்சியினர் புரிந்து கொள்ள வாய்ப்புத்தருவதுமல்லாமல்; தங்களுடைய போக்கில் தவறுதல் இருக்கிறது என்று உணர்த்தப்பட்டால் அந்த ஓரிரு பகுதிகளைத் திருத்தியும், மாற்றியும் அமைத்துக் கொள்ளவும், இந்தக் கூட்டு முயற்சி உதவும்.

உழவர் வாழ்வு, ஒரு கட்சிக்குரிய விஷயமல்ல. பொதுப் பிரச்சினை. இருபோன்றவிஷயங்களில், எல்லா கட்சியினருமாகச் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபடுவது நல்ல காரியம் மட்டுமல்ல; நாட்டு வாழ்வில் உண்மையாகவே அக்கரை கொண்டோர் இவர்கள் என்ற உண்மையையும் எடுத்துக் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/4&oldid=1661884" இலிருந்து மீள்விக்கப்பட்டது