பக்கம்:அன்பழைப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அண்ணாவின்


காலையிலே ஓமந்தூரார் அவர்கள் பேசுகையில்வற்புறுத்திக் கூறிய இரண்டு விஷயங்கள் ஒழுக்கம், கண்ணியம் ஆகியவைகளாகும். இவைபிரண்டும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவை என்று கூறமுடியாது. ஒழுக்கம் கண்ணியம் இரண்டுமே. எந்தக் கட்சிக்கும் அடிப்பீடமாக அமையவேண்டும் கண்ணியமான போக்கு இருந்தால், உட்கருத்துக்களைப்பற்றி தப்பபிப் பிராயம் ஏற்படுத்தாது. பிறரைக் குறித்து, வேண்டுமென்றே குறை கூறவோ, வெறுத்துப் பேசவோ, இடங்கொடுக்காது.

இங்கே நான், முன்னாள் முதலமைச்சர், பழைய கோட்டை பட்டக்காரர் ஆகிய, பல கோணங்களைச் சேர்ந்தோர் இருக்கிறோம். இந்தக் கூட்டுமேடையைக் குறித்து அரசியல் ஆரூடம் கணிக்காமலில்லை. பலர் தங்கள் தங்கள் அறிவுக் கெட்டிய வரை யூகம், அதன் சக்திக்கேற்ற அளவு அரூடம், கணிக்க துவங்கிவிட்டனர்.

'எ'அப்பா அண்ணாத்துரை போகும் மாநாட்டிலா ஓமந்தூரார் கலந்து கொள்கிறார்! இப்படி ஒரு பேச்சு. 'ஓமந்தூரார் அவர்களே! அரசியல் வேடதாரிகளோடு போய்ச் சேராதீர்! இப்படி, துண்டு நோட்டீஸ் மூலம், ஓமந்தூராருக்கு ஒரு எச்சரிக்கை. திருச்சி தீரர்கள் வாழுமிடம் என்றே நம்பி வந்தேன். ஆனால், இப்போது துடை நடுங்கிகள் சிலரும் இருக்கிறார்கள் என்பதையே அத்துண்டு நோட்டீஸ்கள் சொல்லுகின்றன. ஓமந்தூராருக்கு எச்சரிக்கை விடுத்து அச்சடிக்கப்பட்டுள்ள அத்துண்டு நோடீஸின் கீழே, "இங்கனம் ஊர்ப் பொதுமக்கள்' என்று போடப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/5&oldid=1506123" இலிருந்து மீள்விக்கப்பட்டது