பக்கம்:அன்பழைப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

5


ஆனால் அதன் பக்கத்திலேயே எங்கு அச்சடிக்கப் பட்டதோ அந்த அச்சகத்தின் பெயரும் போடப்பட்டிருக்கிறது. அச்சகக்காரர் ஊரார் சொல்லினரா, என்று கேட்டிருக்கமாட்டார். எத்தனை நோட்டீஸ்கள்? எவ்வளவு பணம் தருகிறாய்? என்றுதான், அச்சடிக்க வந்தவரைக் கேட்டிருப்பார்! அவருக்கு நோட்டீஸ் அடிக்கவந்தது பொதுமக்கள் தானா அவர்கள் தான் கூடாதென்கின்றனரா? என்ற விபரம் அவசியமில்லை. இந்த உண்மை நமக்குத் தெரியாதென்று நினைத்தோ, அல்லது தனது பெயரைக் கீழேபோட, கோழைத்தனம் குறுக்கிட்டதாலோ 'பொது மக்கள்' என்று போடச் செய்திருக்கின்றனர். இவ்வளவு, கோழைகளாக தேசீயம் இவர்களை ஆக்கிவிட்டதே என்று வெட்கப்படுகிறேன்.

காலையிலே கண்ணியத்தைப்பற்றி குறிப்பிட்டார் முன்னாள் முதலமைச்சர். அரசியல் சட்சிகளிலே அது, அவசியம் தேவை என்று வலியுறுத்தினார். ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. ஆனால், அந்தக் கண்ணியம், எங்கே குறைந்து வருகிறது என்பதை அவருடைய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

மாநாடு நடைபெறும் பந்தல், சர்தார் படேல் பந்தல். சர்தார் படேல் பந்தலுக்கு அண்ணாதுரை வரும்போது, அண்ணாதுரை வருகிற இடத்துக்கு ஓமந்தூரார் வந்தால் என்ன? வரக்கூடாதா? அல்லது நான் வரலாம் வேறு தலைவர் பெயர்கொண்ட பந்தலுக்கு; அவருக்கு மட்டும் அந்த ஆசை கூடாது என்பதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/6&oldid=1506124" இலிருந்து மீள்விக்கப்பட்டது