உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அண்ணாவின்


இதை உற்று நோக்கினால் எங்களுடைய அரசியல் கண்ணியம் விளங்கும்! இன்னொரு கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் இடத்தில் நான் போகத்தான் வேண்டுமென்பதென்ன? போகாமலிருப்பதால் எங்களது கொள்கைகள் என்ன குறைந்தா போய்விடும்? இருந்தும், பொது விவகாரங்களில் கூட்டு முயற்சி தேவை என்ற உற்சாகத்தோடு நாங்கள் ஏன் கலந்து கொள்கிறோம்!

நாங்கள் கண்ணியம் உடையவர்கள், சகிப்புத்தன்மை எங்களுக்கு அதிகம். விட்டு கொடுப்பது வேதனைகள் நீங்க எப்படியாவது பாடுபடுவது - இவை எங்களுடைய பாதை. இந்த நோக்கத்தை எல்லோரும் அனுஷ்டித்தால், நாட்டில் கட்சிப் பூசல்களும், வீண்சச்சரவுகளும் எப்படி எழும்பும்? ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த அளவு அரசியல் கண்ணியம் மாற்றுக் கட்சியினரிடையிலே மலரவில்லை; மறைத்து விட்டது.

எனினும், மதிப்பிடத்தக்க விலக்காக, குறிப்பிடத்தக்க அளவில், இருப்பவர் தமது ஓமந்துாரார் அவர்கள்.

நான், அவர் ஆட்சி நடத்தியபோது ஒரு வாரம் அவருடைய கைதியாகக் காலங்கழித்திருக்கிறேன். அவரோ! முன்னாள் முதலமைச்சர்; நானோ கைதி.

கைதியும், முன்னாள் முதலமைச்சரும் இங்கே கூடியிருந்து விவசாயிகளின் வேதனையைப் போக்க ஆளுக்கொரு கம்பிகளைப் பிடித்து இழுக்கத்தான். அது தவிர்த்து, வேறு எதற்காகவும் அல்ல. இருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/7&oldid=1661887" இலிருந்து மீள்விக்கப்பட்டது