8
அண்ணாவின்
சர்க்காரும் சமூகமும் விவசாயிகளை எவ்வளவு தூரம் புறக்கணித்து விட்டன என்பதை வேதனையோடு வெளியிட்டார். அதே நேரத்தில் எச்சரித்தார்: 'உழவர்களே! உங்களை அரசியல் கட்சிகள் எளிதில் ஏமாற்றிவிடும். ஆகவே, எந்த அரசியல் கட்சிகளுக்கும் அடிமையாகி விடாதீர்கள்' என்பதாக!
உண்மை , விவசாயிகளின் வேதனை, அவர்களின் அதிருப்தி, மனக்குமுறல் ஆகியவைகளைச் சாதகமாக்கித் தேர்தல் சூதாட்டத்திலே வெற்றிபெற இந்நாட்டு அரசியல் கட்சிகள் முயற்சித்துக்கொண்டுதான் உள்ளன. ஆகவே தான் அவர் விடுத்தார் எச்சரிக்கை, உழவர்களுக்கும் — அதே நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கும்!
நான், ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவன். நான் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பிலே அவருக்கு உறுதி கூறுவேன், உழவர்களைப் பயன்படுத்தி அரசியல் லாபநாேக்கம் கொள்ளமாட்டோம் என்பதை!
மற்ற அரசியல் கட்சிகள் உழவரைப் பயன்படுத்த விரும்புவது — தேர்தலிலே லாபம் பெற. நல்ல வேளையாக எங்களுக்கு அந்த ஆசையுமில்லை — அவசியமுமில்லை!
எங்களது நோக்கம் எல்லாம், பேதமற்ற வாழ்வு சமுதாயத்தில் மலரவேண்டும், எங்கும் இன்பம் மலர வேண்டும் எல்லாரும் மனிதராக வாழவேண்டும் என்பதுதான்!