94 அன்பின் உருவம்
லாமே!" என்ருல், இந்தத் தலைவன் வாழ்கிறது குறிஞ்சி கிலம், தன் ஊர்க்காரர்களே அவன் சாட்சி போட்டால் ஒருகால் அவன் தலைமைக்கு அஞ்சியோ, அவனிடம் உள்ள அன்பு காரணமாகவோ அவனுக்கு உவந்தபடி சொல்லி, உண்மையை மறைத்துவிடலாம். அயல் கிலத்து வண்டா ல்ை உண்மையையே உரைக்கும். இந்த நினைவால் மருத கிலத்து வண்டைப் பார்த்துக் கேட்டான்.
இப்படி இன்றி, தன் கிலத்து வண்டை ஒரு தலைவன் கேட்டான். அது அபிமானத்தினல் தனக்கு விருப்ப மானதைச் சொல்லிவிடுமோ என்ற எண்ணத்தால், ே என்மேல் உள்ள அன்புக்காக என் விருப்பத்துக்கு ஏற்ற தைச் சொல்லாமல் அறிந்ததை உள்ள படியே சொல்” என்று எச்சரிக்கையோடு சொல்லவேண்டி வந்தது. குறுத்
தொகையில் அப்படி ஒரு பாட்டு வருகிறது.
'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி !
காமம் செப்பாது கண்டது மொழிமோ...' இந்த ஐயத்துக்கே இடம் இன்றி இந்தக் காதலன் மருத கிலத்து வண்டுகளேயே பார்த்துக் கேட்டுவிட்டான்.
கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்பு
ஊடுரு கக்குனிக்கும் பாம்பலங் காரப் பரன்தில்லை
அம்பலம் பாடலரின் தேம்பலஞ் சிற்றிடை ஈங்கு இவள்
தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுஉள வோ அளி
காள்,தும் அகன்பனேயே? (வண்டுகளே! குவிதலேயுடைய கைகளேப் பெற்ற அன்பர் களின் என்பு உள்ளே உருகும்படியாக நடனம் செய்யும் பாம்பை