பக்கம்:அன்பின் உருவம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுபோல் உண்டா? 95

அணியாகக் கொண்ட பரம்பொருளின் தில்லைச் சிற்றம்பலத்தைப் பாடாதவர்கள் அடையும் வாட்டத்தைப் போன்ற வாட்டத்தை யுடைய சிறிய இடையையுடைய இவளது இனிய கனிபோன்ற சுவையைப் பெற்ற வாயைப் போல மணம் விசும் ஆம்பல் மலர் கள் உங்கள் அகன்ற மருத நிலத்தில் இருக்கின்றனவா ?

கடம்பல் - குவிதல். அம் அழகிய ஊடு உள்ளே. குனிக் கும் - ஆடும். பாடலரின் - பாடாதவரைப் போல. தேம்பல் - மெலிதலையுடைய, தேம்பினுலும் அழகுடையதென்று காட்ட, அஞ்சிற்றிடை என்ருன். ஈங்கு இவள் இவள் இரண்டும் ஒருசொல் லாக கின்றன. திங்கனிவாய் - இனிய கனிச்சுவையையுடைய வாய், வாய்போலக் கமழும். போது - இங்கே பூ அளிகாள் - வண்டு களே. அகன்பணே - அகன்ற மருத நிலம்.)

திருக்கோவையாரில் 11-ஆம் பாடலாகிய இது கலம் புனேந்து உரைத்தல்' என்னும் துறையமைந்தது. காதலி யின் அழகைக் காதலன் பாராட்டிச் சொல்லுதல் என்பது அதன் பொருள். -

'பொங்கிழையைப் புனைநலம்புகழ்ந்து

அங்கதிர்வேலோன் அயர்வு நீங்கியது '

என்பது அந்தத் துறையை விளக்கும் கொளு. அழகு மிக்க அணிகளே அணிந்த காதலியின் பாராட்டுதற்குரிய அழகைப் புகழ்ந்து, அழகிய சுடர்வீசும் வேலையுடையவன் தன் தளர்ச்சி ங்ேகி இன்புற்றது என்பது இதன் பொருள். * - . . . . . . . . . திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய பழைய உரை ஒன்று உண்டு அதில் கனிவாய் என்பதற்கு, "கனிந்த வாய் என்று உரை எழுதுகிருர். கூம்பலங் கைத் தலம் என்ற தொடரில் அல், அம் என்ற இரண்டும் சாரியை என்று கொண்டு, கூம்பு கைத்தலம் என்று வினைத் தொகையாக்கிப் பொருள் கூறுகிருர் வினைத்தொகையில்