பக்கம்:அன்பின் உருவம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பின் உருவம் 5

களும் ஒன்றாகவே தோன்றுகின்றன. ஆயினும் தாயின் செயலே உண்மையான அன்பினால் அமைவது."

'இந்தக் கூட்டத்தில் இரு வேறு வகையினர் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.” *

'ஆம். அதை நீயே பார்த்தாயே. கையைத் தலைமேல் வைத்து, போற்றி, சயசய போற்றி என்று மாத்திரம் சொல்பவர்கள் ஒரு சாரார். மெய் அரும்பி, விதிர் விதிர்த்து வணங்கிப் போற்றுகிறவர்கள் ஒரு சாரார்.'

'இன்னும் என்ன என்ன வேறுபாடுகள் இருக்கின்றன? என்று ஆர்வத்தோடு கேட்டார் இளைஞர்.

"மற்றொரு சோதனை சொல்கிறேன். அதையும் கவனித்து வா. முன்பு அவர்களுடைய மெய்யைக் கவனித்தாய். இப்போது அவர்களுடைய உறுப்புக்களைக் கவனித்து வா.”

'அவர்களுடைய கையையும் தலையையும் கண்டு தானே வந்தேன்?" -

"அது போதாது. உடம்பிலே சிறந்த உறுப்புத் தலை தான். ஆனால் அந்தத் தலையிலும் முகத்தில் இருக்கிற கண்களே சிறந்தவை. உலகத்தில் வாழும் மக்களுடைய கண் பார்வையைக் கொண்டே அவர்களுடைய இயல்பைச் சொல்லி விடலாம். இப்போது இவர்களுடைய கண்களை ஆராய்ச்சி செய்.”

"எப்படி ஆராய்ச்சி செய்வது ? பெரிய கண், சிறிய கண், கரிய கண், சிவந்த கண் என்று அக்கண்களின் உருவத்தையும் நிறத்தையும் ஆராயச் சொல்கிறீர்களா?"

'இல்லை, இல்லை, கண் என்று சொன்னது தவறு; பார்வை என்று சொல்லியிருக்க வேண்டும். இவர்களுடைய பார்வைகள் எங்கெங்கே பதிந்திருக்கின்றன என்று