Ꮾ அன்பின் உருவம்
ஆராய்ந்து பார். இதையும் நுட்பமாக ஆராய வேண்டும்" என்று சொல்லியனுப்பினர்.
இளைஞர் சென்றார். இப்போது பார்வைகளை ஆராய்ச்சி செய்யும் வேலையில் ஈடுபட்டார். கூட்டத்தில் ஒருவர் தம்முடைய மார்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொருவர் தம் ருத்திராட்ச மாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் அருகில் நின்றவருடைய ஆடையைக் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னும் ஒருவர் எங்கோ ஒரு மூலையை நோக்கினர். இப்படி வெவ்வேறு இடங்களில் பார்வையைச் செலுத்தினவர்கள் பலர். சிலர் இறைவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வேறுபாடுகளையெல்லாம் கண்ட இளைஞர் முதியவரிடம் வந்து தாம் கண்டதைச் சொன்னாா்
'முன்பு மெய்ப்பாடுகளாகிய இயற்கை விளைவும், கைகூப்பி வாழ்த்துவதாகிய செயற்கை விளைவும் ஒருங்கே ஒருவரிடம் இருப்பதைக் கண்டாய். அப்படிச் சிலர் இந்தக் கூட்டத்தில் இருக்கக்கூடும். இப்போது இவர்களுடைய பார்வையிலிருந்து இரு வேறு வகையினர். இங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாய்.”
"உண்மை. இறைவனைப் பார்க்கிறவர்கள் ஒரு சாரார்; மற்றவற்றைப் பார்க்கிறவர்கள் ஒரு சாரார்.' . "அப்படிச் சொல்லக்கூடாது. எல்லோரும் இறைவனைப் பார்ப்பார்கள். ஆனால் இறைவனை மாத்திரம் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள், இன்றவனையும் மற்றப் பொருள்களையும் பார்ப்பவர்கள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். இறைவனைப் பார்ப்பவர்களிலும் இரு வேறு வகையினர் உண்டு.” -
"அது என்ன வகை?" 'அதற்கும் ஓர் ஆராய்ச்சி நடத்த வேண்டும்” என்று. சொல்லி முதியவர் சிரித்தார்.