பக்கம்:அன்பின் உருவம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பின் உருவம் 7

'உண்மையைக் காண எத்தனை ஆராய்ச்சி நடத்தி லுைம் கடத்த வேண்டியதுதானே? சொல்லுங்கள். செய்கிறேன்.' -

'கண் பார்வையைப் பார்த்து வந்து சொன்னுய். இறைவனுடைய கோலத்தைக் காண்பவர்களே இன்னும் கூர்ந்து கவனித்து வா. இறைவன் கோலத்தில் எந்த எந்தப் பகுதியைப் பார்க்கிருர்கள் என்பதைக் கூர்ந்து அறிந்து வா. து.ாணருகில் கிற்கும் அன்பர் கண்ணேத் திறந்தால் எங்கே பார்க்கிருர் என்பதை நுட்பமாகப் பார்த்துத் தெரிந்து கொண்டு வா.”

இளேஞர், கூட்டத்தினரை அணுகினர்; நுட்பமாக ஆராய்ந்தார். இறைவன் வாகனத்தைக் கவனிப்பாரும், இறைவன் மேனியை மேலும் கீழும் உற்று நோக்குவாரும், இறைவன் திருமுக மண்டலத்தைப் பார்ப்பவரும், அவ. னுடைய திருவடிகளேயே காண்பவருமாக அன்பர்கள் இருந்ததைக் கண்டார். துரணருகில் மெய் அரும்பி விதிர் விதிர்த்து கின்றவரைக் குறுகினர். நல்ல வேளையாக அவர் கண் இப்போது மலர்ந்திருந்தது. அந்தக் கண் பார் வையைக் கவனித்தார். அது எம்பெருமானுடைய திருவடி லே பதிந்திருந்தது. சில கணங்கள் அந்தப் பார்வை அப்படியே நின்றது. உடனே குபுக்கென்று அந்தக் கண் களிலிருந்து நீர் ததும்பியது. அன்பர் இப்போது தாரை

தாரையாகக் கண்ணிர்விடத் தொடங்கினர்.

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து - உன்விரை ஆர்கழற்கு என் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி. விதிர் விகிர்த்து கடுங்கி. விரை ஆர் கழற்கு மணம் பொருந்திய கிருவடியைக் கண்டு அதன் பொருட்டு.)

அந்த மெய்யன்பருடைய கிலேயைக் கண்டு இளைஞர் உருகிப் போனர். முதியவரிடம் ஒடி வந்தார். "நீங்கள்