8 அன்பின் உருவம்
சொல்வது உண்மை. கண் காட்டி விட்டது உண்மை அன்பை” என்று வியப்பினால் கூவினார்.
“என்ன கண்டாய்” என்று கேட்டார் முதியவர்.
“கண்டறியாதன கண்டேன். இறைவனையே காணும் கூட்டத்தினரிலும் வேறுபாடு கண்டேன். அவனுடைய பல்வேறு அழகுகளைக் கண்டு அவர்கள் இன்புறுகிறார்கள். அந்த மெய்யன்பரோ இறைவனுடைய திருவடியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.”
'நீ உண்மையை உணர்ந்து விட்டாய். அன்பர்கள் இறைவனுடைய பேரழகில் ஈடுபட்டு அதனைக் கண்டு இன்புறுவார்கள். ஆயினும் அவனுடைய திருவடியில் தான் அவர்களுக்கு நாட்டம். அதுதான் அவர்களுக்குப் பற்றுக்கோடு இறைவனுடைய பெருமையை அவனுடைய உறுப்புக்கள் யாவும் காட்டுகின்றன. ஆயினும் அப்பெருமானே அடையும் அன்பர்களுக்கு உரிய பற்றுக்கோடாக இருப்பது அவன் திருவடியே. மரத்தின் கிளைகளும் கொம்புகளும் வளார்களும் இலைகளும் பலவாக இருந்தாலும் அதற்கு நீர் வார்க்க வேண்டுமானல் அடியில் உள்ள வேரிலேதான் வார்ப்பார்கள். அன்பர்களும் இறைவன் அடியையே நோக்கியிருப்பார்கள்."
. 'நல்ல உவமை சொன்னீர்கள்! அந்தத் திருவடியிலே நாட்டங் கொண்டு இவர்களும் கண்ணிர் விடுகிறாா்கள்.”
இறைவனுடைய திருவடியைப் பற்றிக்கொள்வதனால் அன்பர்களுக்கு அடியார்கள் என்றும், திருவடி சம்பந்திகள் என்றும் பெயர் வந்தன. தோளார், கையார், முகத்தார். என்று சொல்வது வழக்கம் அல்லவே. இறைவன் திருமேனி அழகைக் கண்ணாரப் பருகி இன்புற்றாலும் கடைசியில் அமைதி பெற நாடிப் புகுமிடம் திருவடிதான்.