அன்பின் உருவம் 9
உண்மை அன்பர்கள் அத்திருவடியை நோக்கியே கும்பிடுவார்கள். அந்தக் கழற்கே தலைமேற் கைகூப்பி வணக்கம் புரிவார்கள். அந்தக் கழலையே பாராட்டுவார்கள்.”
'அந்த மெய்யன்பர் இறைவன் கழலையே கண்டார். உன் விரையார் கழல் வெல்க என்று வாழ்த்தினார்.”
"ஆம், இறைவன் கழல் நறுமணம் பொருந்தியது. தேவர்களும் அன்பர்களும் பல பல மலர்களால் அருச்சித்துப் போற்றும் அடிகள் அல்லவா?* அன்பர்களுடைய மலரின் நறுமணமும் உளத்தின் அன்பு மணமும் சார்ந்து சார்ந்து மணப்பது. அதுவன்றி இயற்கையாகவே ஞானம் மணக்கும் திருவடி அது. அதுவே ஞான மயமானது.t ஞான மணமும் மலர் மணமும் வீசும் இறைவன் பூம் பதத்தை விரையார் கழல் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது.” - -
'அந்த மெய்யன்பர் கண்ணிர் விடுகிறாரே!”
'விடுகிறார் என்று சொல்லக்கூடாது. அவராக நினைந்து முயன்று விடுவது அன்று அது. மற்றவர்களிடம் அதைக் காண முடியாது. கண்ணிர் தானே ததும்புகிறது. அது இயற்கையான மெய்ப்பாடு, மெய்யிலே புளகமும் நடுக்கமும் இயற்கையாகத் தோன்றியதுபோலக் கண்ணீரும் இயற்கையான விளைவு பொய்யன்பர்களிடம் காண முடியாதது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணிர் பூசல் தரும் -
என்று வள்ளுவர் சொன்னார். கண்ணால் பார்க்கும் பார்
- இறைவன் திருவடிகள் எல்லாப் பொருள்களையும் கடந்து நின்றனவாயினும், அன்பர்க்கு அணியவாய் அவர் இட்ட நறுமலரான் வெறிகமழும் என்பது போதா வெறியார் கழல் என்றார்.” - -
- திருக்கோவையார், 250, உரை. 1 தொண்டர் கண் உண்டிமொண் டுண்டிருக்கும்வசந்த ஞானமெனும், தண்டையப் புண்டரிகம்.' - -அருணகிரியார்