அன்பின் உருவம் 1莺
யும் இரும்புக்கும் காந்த சக்தி அமைவதுபோல இவர்களுக் கும் அந்த மெய்ப்பாடுகள் சில சமயங்களில் உண்டாகின்றன. இவர்களுடைய உள்ளத்தில் பொய் கரையக் கரைய அந்த மெய்ப்பாடுகள் மிகுதியாகின்றன. நமக்கு இன்னும் இறைவன் திருவருள் கிடைக்கவில்லையே என்ற புழுக்கம் உள்ளே தோன்றுகிறது. நெஞ்சம் வெதும்புகிறார்கள். வேதனையினால் உண்டாகும் இந்தப் புழுக்கத்தினால் உள்ளத் தில் உள்ள மாசு கரைகிறது: தேய்கிறது. பொய்தவிர்ந்து போற்றுகிறார்கள். முன்பு உலகியல் வாழ்வில் இவர்களு டைய கரணங்கள் ஈடுபட்ட முறையே வேறு. இப்போது அன்பர் கூட்டத்திற் கலந்த பிறகு நிகழும் நிகழ்ச்சிகளே வேறு." - .
'நான் அதை உணர்கிறேன். இவர்களுடைய உள்ளம் வெதும்புகிறது; அதன் பயனாகப் பொய் தவிர்கிறது; இவை மனத்தில் உண்டாகின்றன. அவர்கள் உடம்பு நெகிழ் கிறது, புளகம் அரும்புகிறது; மேனி விதிர் விதிர்க்கிறது; கண் கழலே நோக்குகிறது நீரைச் சொரிகிறது. இவை உடம்பில் நிகழும் செயல்கள். இறைவனே போற்றி! உன் திருவடி வெல்க! உன் அருள் வெல்க! போற்றி சயசய போற்றி என்று வணங்கி வாழ்த்துகிறார்கள். இவை வாக் கில் நிகழும் செயல்கள். பொய் தவிராத காலத்தில் இவர் கள் உடம்பும் கண்ணும் கையும் தலையும் யார் யாரையோ வணங்கின; என்ன என்னவோ மெய்ப்பாடுகளை உடையன வாக இருந்தன. இவர்கள் நெஞ்சங்கள் எது எதற்காக வோ வேதனையுற்றன. இவர்கள் வாய் என்ன என்னவோ பிதற்றின. இப்போது மெய்யன்பு தலைப்படவே பொய்ச் செயலும் பொய்ச் சொல்லும் பொய் எண்ணமும் தவிர்க் தன. இந்த மாற்றம் எனக்கு நன்றாகப் புலப்படுகிறது.”
இளைஞர் முகமலர்ச்சியுடன் பேசினர். புதிய உலகத் தைக் கண்டவரைப் போன்ற வியப்பில் மூழ்கியிருந்தார்.