உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14{{center|}அன்பின் உருவம்}


மெய் - உடம்பு. தான்: அசை. அரும்பி - புளகம் அரும்பி; மயிர்க்கூச்செறிந்து, விகிர் விதிர்த்து கடுங்கி, விர்ை - மனம், கழல் - காவில் அணியும் வீர வெண்டயம்; அது இக்கே திரு வடிக்கு ஆயிற்று; ஆகு பெயர். கழிற்கு - கழலின் பொருட்டு. ததும்பி பொங்கி. வெதும்பி புழுங்கி, வேதனே அடைந்து. போற்றி - வணங்கி, இரண்டு போற்றிகளையும் அன்பருடைய வார்த்தைகளாக வைத்தும் பொருள் சொல்லலாம். சய ஜய; வெல்க. கை -ஒழுக்கம். நெகிழ தளர. கொள் ஏற்றுக் கொள்.)

மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகத்தில் திருச்சதகம் என்னும் பகுதியில் உள்ள நூறு பாடல் களில் முதற் பாடலாக விளங்குவது இப்பாட்டு. திருச் சதகத்துக்குமுன் சிவ புராணம், கீர்த்தித் திருவகவல், திரு வண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்ற நான்கு கெடும் பாடல்கள் உள்ளன. போற்றித் திருவகவலே அடுத்து நிற்பது திருச்சதகம். அந்தத் திருவகவல்,

போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி!

என்று முடிகிறது. தொடர்ந்து வரும் திருச்சதகத்தின் முதற் பாட்டாகிய இதில் அதன் கடைசியடியிலுள்ள சொற்கள் வீணையின் ஒலி இழைவது போலக் கேட் கின்றன. - -

போற்றி சயசய போற்றி என்னும்

கைதான் நெகிழவிடேன்.

மெய் புளகம் போர்ப்ப, நடுக்கம் உண்டாக, கையைத் தலையின் மேல் வைத்து, கண்ணிர் வார, சயசய போற்றி என்று வாழ்த்தி கிற்கும் அன்பருடைய கோலம் இந்தப் பாட்டைப் படிக்கும்போது நமக்குப் புலனுகிறது. இவை