பக்கம்:அன்பின் உருவம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்து நில்லாக் கள்வன்

அவர் ஒரு சிவ பக்தர், பேராசையுள்ள சிவ பக்தர். உலகத்துப் பொருள்களிலே பேராசை இல்லை. தமக்கு மேன்மேலும் அன்பு வளர வேண்டும் என்னும் பேராசை உடையவர். அவருடைய அன்பு கிலேயைக் கண்டாலே, 'இப்படி இருப்பவர்கள் உலகத்தில் யார்' என்று நமக்கு வியப்பு உண்டாகும். ஆல்ைஅவரோ, "கான் என்ன அன்பு செய்து விட்டேன்! நான் இன்னமும் செய்யுமாறெல்லாம் செய்யவில்லையே! இறைவன் அந்த கிலேயில் என்னே வைத் தருளவில்லையே!” என்று மனம் கைந்து சாம்புவார். r

காலையில் எழுந்து எங்கே எங்கே மலர்ச் செடிகள் உண்டென்று காடித் தேடிச் செல்வார். சிவபெருமா னுடைய தலங்கள் எங்கு உண்டோ அங்கெல்லாம் அவ ரைப் பார்க்கலாம். பல வ ைக ய ர ன மலர்களைப் பறிப்பார். பறித்துக் கோது நீக்கி ஆய்வார். என்ன என்ன மலர்கள் இறைவனுக்கு உரியன என்று சாத்திரங்களை ஆராய்வார்; புராணங்களே ஆராய்வார்; அன்பர்களேக் கேட் பார். இப்படிப் பலவாருக ஆய்ந்த மலர்களேயெல்லாம் தொகுத்து இறைவனுக்கு அருச்சனை செய்ய முற்படுவார்.

ஒரு நாள் இரண்டு நாள் செய்கிற காரியம் அன்று இது. எப்பொழுதும் இதுவேதான் அவருக்கு வேலை. 'இறைவனுடைய இந்தத் தலத்துக்கு இன்று போக வேண் டும்; இன்ன இன்ன மலர்களையெல்லாம் கொண்டு போக வேண்டும்; இத்தனை அருச்சனே செய்ய வேண்டும் என்று அவர் எப்பொழுதும் கினைத்துக் கொண்டே இருப்பார்: கினைத்தபடியே செய்வார்.