பக்கம்:அன்பின் உருவம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்து நில்லாக் கள்வன் 17

பரிந்துபல் ஆய்ம்லர் இட்டு, - இது ஒரு நாளும் முட்டுப்படாமல் கடந்து கொண்டே வருகிறது. இறைவனுடைய அடியிலே அருச்சனை செய்து அதனை வணங்குவதே அவர் வேலை. -

முட்டாது அடியே இறைஞ்சி.

ஒரு நாள் அவரை ஒருவர் கண்டார். 'ஐயா, நீர் எப் போதும் இவ்வளவு பரபரப்போடு மலர்களேயெல்லாம் குவித்து ஒரு காள் கூடத் தடை இல்லாமல் ஆண்டவ னுடைய திருவடிக்கு அருச்சனே செய்து விழுந்து விழுந்து வணங்குகிறீரே. உம்முடைய வாழ்க்கை எப்படி கடக் கிறது? நீர் எப்படிச் சம்பாதிக்கிறீர்? உமக்கு யார் பொருள் கொடுக்கிருர்?" என்று கேட்டார். அந்த அடியவர் பேச ஆரம்பித்தார்.

பொருள் ஈட்டுவதைச் சொல்கிறீர்களா? யாரைக் கேட்டால் கமக்கு வேண்டிய பொருள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?' என்று திருப்பிக் கேட்டார்.

'ஏன்? எத்தனையோ செல்வர்கள் இருக்கிருர்கள். நாம் செய்கிற வேலையை வாங்கிக்கொண்டு கூலி கொடுக் கிறவர்கள் இருக்கிருர்கள். அவர்களிடத்திலே சென்று வேலே செய்து வேண்டியவற்றைப் பெறலாமே!” என்ருர் நண்பர். - -

அதைக் கேட்ட பக்தர் சற்றுப் புன்னகை பூத்தார். 'கான் சோம்பேறி. எனக்குப் பிறருடைய உள்ளம் விரும் பும்படியாக வேலை செய்ய முடியாது. என்ன செய்வது? என்ருர், -

"அப்படியானல் அன்புடையவர்களிடத்திலே போய் எனக்கு இது வேண்டும் என்று கேட்கலாமே!” என்று நண்பர் சொன்னர். - -

2