உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O அன்பின் உருவம்

(பல இடங்களுக்குச் சென்று ஆராய்ந்து எடுத்த பல மலர் களே அருச்சித்து இடையீடு இன்றித் தன் திருவடியை வணங்கி இரத்த எல்லாவற்றையும் தமக்கென்று பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணும் அன்பர்களின் உள்ளத்தில் மறைந்து கில்லாத கள்வனே ! -W.

பரந்து.பல இடங்களிற் சென்று; பரபரப்புடன் என்றும் சொல்லலாம். ஆய்மலர்-ஆராய்ந்த மலர்கள். முட்டாது . இடை யீடு இன்றி. இறைஞ்சி-வணங்கி. கரந்து-மறைந்து.)

Yor

அன்பர்களிடத்தில் இத்தனே அன்புடையவகை இருக் கின்ற ஆண்டவனேப் பணியாமல், வாழ்த்தாமல், அவனே நினைந்து உருகாமல், விணுக யார் யாரையோ கம்புவதில் பயன் என்ன? அவனுடைய திருவடிக் கண்ணே உண்மை யான அன்பு இடையீடில்லாமல் இருந்தால் நமக்கு எத லுைம் குறைவே உண்டாகாது. அந்த அன்பைத்தான் நாம் அவனிடத்திலே யாசிக்கவேண்டும். 'எனக்கு அது வேண்டும். இதுவேண்டும்" என்று கேட்பதற்கு முன்னலே, “எனக்கு உன்னுடைய அன்பு வேண்டும்' என்று யாசித்தால், அதன் பிறகு இறைவன் வேண்டிய வற்றையெல்லாம் தருவான். இறைவனுடைய அன்பர் கூட்டத்துக்குள்ளே ஒருவகை அமர்ந்துவிட்டால் பிறகு எது கேட்டாலும் தருவான். - - கேட்பதற்கு எல்லாருக்கும் தெரியும். உலகிலுள்ள மக்கள் எல்லோரும் எத்தனையோ பொருள்கள் வேண்டு மென்று இறைவனேக் கேட்டுக்கொண்டுதான் இருக்கி ருர்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னலே ஒன்று செய்ய வேண்டும். அவன்பால் அன்புடையவர்ாக வேண்டும். அப்படியாளுல்தான் அவனைக் கேட்கும் உரிமை கிடைக் கும். ஆல்ை அவர்களுடைய உள்ளத்தில் வெறும் ஆசை. இருக்கிறதே அன்றி அன்பு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/26&oldid=535448" இலிருந்து மீள்விக்கப்பட்டது