22 அன்பின் உருவம்
என்று கினைக்கக்கூடாது. எது கேட்டாலும் இறைவன் தருவான். ஆனாலும் தங்களுக்கு கன்மை தராத பொருளே அவர்கள் கேட்கவே மாட்டார்கள். கேட்பதே மிக அரு மையாக இருக்கும். -
ஆசைப்படுவதற்கு முன்னலே அன்பு செய்யவேண்டும். அன்பு செய்த பிறகு, எதைக் கேட்டாலும் தருவான். இடையீடில்லாத அன்பு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்
எப்பொழுது எதைக் கேட்டாலும் தருவான். சில காலம்
அன்பு வைத்துச் சில காலம் மறந்திருந்தால் அன்பு வைத்த காலத்தில்தான் கேட்ட பொருள் கிடைக்கும். எப்பொழுது கேட்டாலும் எது கேட்டாலும் கிடைக்கவேண்டுமானல் எல்லாச் சமயத்திலும் ஆண்டவனிடத்திலே அன்பு இருக்க வேண்டும். அன்பு இடையீடில்லாததாக இருந்தால் இரந்ததெல்லாம் நமக்குக் கிடைக்கும்.
நின் வார்கழற்கு அன்பு எனக்கு நிரந்தர மாய்அரு ளாய் என்று கேட்கிருர் மாணிக்கவாசகர். இந்த அன்பைக் கேட் பதற்குக் காரணம், இரந்தவெல்லாம் எமக்கே பெறலாம் என்ற நோக்கம் அன்று. அந்த நோக்கம் தவறு. இறைவனிடத்திலே அன்பு செய்வது இறைவனுடைய திருவருள் கிடைக்கவேண்டும் என்ற ஒன்றுக்குத்தான். ஏதேனும் வேண்டுமானல் கேட்கலாம்; கிடைக்கும். அது நடுவிலே வந்த செய்தி. இறைவனிடத்தில் அன்பு உடைய வகை இருப்பதே ஒரு பெரிய இன்பம். - இடையீடில்லாத அன்பு எதற்காக வேண்டும்? இறை வசீனத் தொழுவதற்காகத்தான். அதை மாணிக்கவாசகர் சொல்லுகிருர்
. . நின்கழற்கு அன்புஎனக்கு நிரந்தர மாய்அரு ளாய் நின்னே
ஏத்த முழுவதும்ே.