இரண்டு வழிகள்
இரண்டு சாலைகள் பிரிகிற இடத்தில் ஒரு மனிதன் கின்றுகொண்டிருக்தான். எந்த வழியாகப் போகவேண்டு மென்பதைச் சற்று யோசித்தான். இரண்டு வழியிலும் இந்தச் சாலே இன்ன இன்ன இடத்திற்குச் செல்லுவது என்ற குறிப்பு இருந்தது. ஒரு சாலேயில் ஆமாறு’ என்று போட்டிருந்தது. மற்ருெரு சாலேயில் 'சாமாறு என்று போட்டிருந்தது. . .
ஆதல், சாதல் என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் விரோதம். மனிதன் மேலும் மேலும் வளர்ச்சி பெறுவதை ஆக்கம் என்று சொல்வார்கள். இறந்துபோவது சாவு என் பது நமக்குத் தெரியும். மனிதன் நாள் ஆக ஆகத் தான் வளர்ந்து வருவதாகவே கினேக்கிருன். ஆனல் உண்மையை நோக்கிளுல் அவன் சாவை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிருன் இருபது ஆண்டுகள் ஆயின. அதற்கு ஏற்ற வளர்ச்சி அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும், மரணம் என்ற முடிவிடத்தைக் குறுகுவதற்கு இருபது ஆண்டு கடந்துவிட்டான்: அந்த மரணத்துக்கும் அவனுக்கும் இடையில் இருபது ஆண்டுத் தாரம் குறைந்துவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும். -
நாம் புறப்பட்ட இடத்தைப் பற்றி என்னுவதைக் காட்டிலும் போய்ச் சேரவேண்டிய இடத்தைப் பற்றி நினைப்பதுதான் அறிவுடைமைக்கு அழகு.போய்ச் சேருகிற இடம் இன்னதென்று நமக்கு முதலில் தெரிந்துவிட வேண் டும். நம்முடைய உள்ளத்தில் நல்ல இடத்திற்குப் போவோம்