இரண்டு வழிகள் 25
என்று கினேத்துக்கொண்டால் போதாது; அதற்குரிய முயற் சியும் செய்யவேண்டும். -
இரண்டு சாலைகளும் சந்திக்கின்ற இடத்தில் நிற்கின்ற பிரயாணி ஆக்கத்திற்குரிய வழியில் செல்லுவானேயன்றி மரணத்திற்குரிய வழியில் செல்லமாட்டான். சாதலைக் காட்டிலும் ஆதல்தான் மனிதனுக்கு விருப்பம். 'உனக்கு மரணமில்லாப் பெருவாழ்வைத் தருகிறேன்; இந்த மருக் தைச் சாப்பிடு, மரணம் வராது" என்று சொன்னல் அதைச் சாப்பிடுவதற்கு நாம் தயாராக இருக்கின்ருேம். தேவர்கள் கூட மரணம் இல்லாத வாழ்வு பெறுவதற்காகத் தான் அமுதத்தை உண்டார்கள். நாமும் அமுதம் கிடைக்கு மால்ை உண்ணுவதற்குச் சித்தமாக இருக்கிருேம். ஆனல் அந்த அமுதம் கிடைக்கும் இடம் இன்னது என்றுதான் தெரியவில்லை. அது எளிதிலே கிடைத்தால் நாம் உண்னு வோம். முயற்சி இல்லாமலே கிடைத்தால் ஊக்கத்துடன் உண்ணுவோம்.
உண்மையில், மரணத்தை வெல்வதற்குரிய வழி ஏதாவது உண்டா, இல்லையா? உண்டு. அது தெரியாமல் இருப்பதல்ை சாகும் ஆற்றில் நாம் செல்லுகிருேம். ஆதல் என்ற முடிவுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கின்ற வழி வேறு இருக்கிறது. உலகத்தில் உள்ள மக்களில் பெரும்பாலோர் சாதல் என்ற இடத்திற்குத்தான் போய்க்கொண்டிருக் கிருர்கள்; மிக விரைவாகப் போய்க்கொண்டிருக்கிருர்கள். எத்தனேக்கு எத்தனே அவர்களுக்கு ஆற்றலும் அறிவும் இருக்கின்றனவோ அத்தனேக்கு அத்தனே அவர்கள் மிக விரைவாக மரணத்தை நோக்கிச் செல்லுகிருர்கள். அவர் களுடைய சதுரப்பாடெல்லாம், சாமாற்றைச் சார்வதற்கே, மரணத்தை அடைவதற்கே அமைகின்றன. -
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.
(சதுராலே-சாமர்த்தியத்தால். சார்வான். அடையi