பக்கம்:அன்பின் உருவம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு வழிகள் 29.

செயல்களைக் காணலாம், காட்டு வழியிலே போகிறவர்கள் கையில் ஆயுதங்களுடன் செல்வார்கள். கூட்டமாகப் போவார்கள். நிழலும் நீரும் உள்ள சாலை வழியே போகி றவர்கள் அங்கங்கே தாகத்திற்குத் தண்ணிர் அருந்தி மர நிழலில் தங்கி இளைப்பாறிச் செல்வார்கள். இந்தச் செயல் கள் வழியின் இயல்புக்கு ஏற்ப மாறுபடும்.

ஆகின்ற வழியிலே செல்லுபவர்கள் என்ன என்ன செய்வார்கள்? அவர்கள் இறைவன் திருவடியை நினைந்து உள்ளம் குழைவார்கள்: அன்பினால் உருகுவார்கள். அகம் குழைவதை அவர்களுடைய கண்களும் முகமும் பேச்சும் காட்டும். அவற்றில் உருக்கம் உண்டாகும். மணற் குன் றுக்கு அடியிலே தண்ணிர் ஓடினல் அந்தக் குன்று மெல்ல மெல்லக் கரைகிறது. அகம் அன்பினல் குழையும்போது உருக்கம் ஏற்படுகிறது. இவை இரண்டும் உள்ளத்திலே தோன்றும் உணர்ச்சியும் அதல்ை விளையும் மெய்ப்பாடும் ஆகும். அடுத்தபடியாக விளேகின்ற செயல்கள் சில உண்டு. நம் அன்புக்கு உரிய குழந்தை, மனேவி ஆகியவர் களிடம் அன்பைப் பல படியாகக் காட்டுகிருேம். அவர் களுக்கு அலங்காரம் செய்து பார்க்கிருேம். நம் விருப்பத் துக்கு உரிய எல்லாப் பொருள்களே யும் அலங்காரம் செய் வதில் நமக்குத் திருப்தி உண்டாகிறது. வீட்டை அலங் கரிக்கிருேம்; உடம்புக்கு அலங்காரம் செய்துகொள்கிருேம்: குழந்தைக்கு ஆடையணிகள் புனேகிருேம். இறைவனிடத் தில் அன்பு பூண்டு அகம் குழைந்து உருகும் அன்பர்கள் தம் அன்பைப் பல வழிகளில் காட்டுகிருர்கள். இறைவ. னுடைய உருவத் திருமேனியைப் பூமாலே புனேந்து வழிபடு: கிருர்கள். அவனுடைய பெருமையைப் பலவாறு எடுத்துப் பாராட்டிப் புகழ்கிருர்கள்.

இறைவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன், மகா தேவன். அவனுடைய பெருமையை நாம் உணர்ந்து அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/35&oldid=535457" இலிருந்து மீள்விக்கப்பட்டது