உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 அன்பின் உருவம்

செய்யும்போது அவன் திறத்தில் இன்னும் என்ன என்ன செய்யலாம் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். 'அவன் கடக்குமிடத்தையெல்லாம் மணி பதித்துத் தளம் போடலாமா? அவன் திருவடித் துகளே உடம்பெல்லாம் பூகிக்கொள்ளலாமா? என்றெல்லாம் எண்ணங்கள் உதய மாகும். அந்த அன்புக்கு இதுதான் செய்யலாம் என்ற வரையறை இல்லை.

        " அவன் கோயிலே அலகிட்டுப் பெருக்கவேண்டும்; மெழுகவேண்டும்” என்று தோன்றும்; தோன்றுவது மாத் திரம் அன்று; அப்படியே செய்வார்கள் பக்தர்கள். இறை வனுடைய திருத்தொண்டுகள் பலவற்றில் அவன் கோயி லேத் தூயதாக வைத்துக்கொள்ளுவதும் ஒன்று. -
     மகாத்மா காந்தியடிகள் வீதிகளைச் சுத்தம் செய்து காட்டினர். தேசத் தொண்டர்கள் தோட்டி வேலையையும் செய்யவேண்டும் என்று செயலிலும் செய்தார். தேசபக் திக்கு இத்தகைய செயல்களெல்லாம் அடையாளங்கள் என்பதைக் காந்தியடிகள் செய்து காட்டினர். தெய்வ பக் திக்கு அலகிடுதல், மெழுகிடுதல் என்பனவும் அடை யாளங்கள் என்பதைத் திருத் தொண்டர்கள் செய்து காட்டியிருக்கிருர்கள். அப்பர் சுவாமிகள் உழவாரத் தொண்டு செய்தார். ஆனந்தத்தால் அன்பர்கள் கூத்தாடு வார்கள். இத்தகைய செயல்கள் இறைவன் அருள் பெற்று மேன்மேலும் ஆக்கம் பெறுவோருக்குரிய அடையாளங்கள். -
           
           புத்தேளிர் 
  கோமான்! நின் திருக்கோயில் தூ கேன் 
        மெழுகுள் கூத்தாடேன்.
   மாணிக்கவாசகர் ஆகும் ஆற்றில் நிகழும் செயல்கள்இவை என்று சொல்லவில்லை; ஆயினும், ஆகுமாற்றில்ே